இலங்கை, இந்தியா, அவுஸ்திரேலியா, இங்கிலாந்து, தென்னாப்பிரிக்கா மற்றும் மேற்கிந்தியத் தீவுகள் ஆகிய ஆறு நாடுகளின், புகழ்பெற்ற முன்னாள் கிரிக்கெட் வீரர்கள், இன்டர்நேசனல் மாஸ்டர்ஸ் லீக்கின் முதலாவது தொடரில் பங்கேற்கவுள்ளனர்.
இந்தப்போட்டிகள் 2024, நவம்பர் 17 முதல் 2024 டிசம்பர் 8 ஆம் திகதி வரை நடைபெறவுள்ளன.
எனினும் பாகிஸ்தான், பங்களாதேஸ், நியூஸிலாந்து, உட்பட்ட ஏனைய நாடுகளின் முன்னாள் வீரர்கள் பங்கேற்கவில்லை.
இன்டர்நெசனல் மாஸ்டர்ஸ் லீக்கிற்கான நான்கு போட்டிகளின் ஆரம்ப ஆட்டங்கள் நவி மும்பையில் உள்ள பாட்டீல் மைதானத்தில் நடத்தப்படவுள்ளன.
சச்சின் டெண்டுல்கர் மற்றும் குமார் சங்கக்கார ஆகியோரின் தலைமையிலான இந்தியா மற்றும் இலங்கை அணிகளுக்கு இடையில் முதல் போட்டி, நவம்பர் 17இல் நடைபெறவுள்ளது.
இரண்டாவது போட்டியில் சேன் வொட்சனின் தலைமையிலான அவுஸ்திரேலியா மற்றும் ஜெக் கலிஸின் தென்னாப்பிரிக்காவை எதிர்கொள்கிறது.
அதைத் தொடர்ந்து இலங்கை அணி, இயோன் மோர்கனின் இங்கிலாந்து அணியை எதிர்கொள்கிறது.