தனியாள் வருமான வரி இலத்திரனியல் கோப்பிடல் முறையானது இலகுபடுத்தப்பட்டுள்ளது.
வருமான விபரத்திரட்டினை சமர்ப்பிப்பதற்கான தகுதி அளவுகோல்கள் வெளியிடப்பட்டுள்ளன .
1 . ஊழிய வருமானம் மட்டும் பெறுபவர்கள்
2. வங்கி அல்லது நிதி நிறுவனத்தினால் AIT கழிக்கப்பட்ட வட்டி வருமானம் மற்றும் வட்டி வருமானம் மட்டும் பெறும் நபர்கள்
3. முதன்மை வருமானம் மற்றும் வட்டி வருமானம் ஆகிய இரண்டையும் மட்டும் கொண்டவர்கள்
4. பூச்சிய வருமானத்தை கோப்பிடும் நபர்கள்
தனிநபர் இலத்திரனியல் கோப்பிடுவதற்கு தனிப்பட்ட அடையாள இலக்கத்தை கொண்டிருக்க வேண்டும்.
மேற்கூறிய விடயங்களில் உள்ளடங்கும் நபர்கள் மதிப்பீட்டாண்டு 2023 / 2024 இற்கான வருமான வரி விபரத்திரட்டினை நவம்பர் 30 அன்று அல்லது அதற்கு முன்னர் சமர்ப்பிக்க வேண்டும் என வலியுறுத்தப்பட்டுள்ளது.