மட்டக்களப்பு நகரினுள் செல்ல முடியாத நிலை

மட்டக்களப்பு நகரினுள் செல்ல முடியாத நிலை

முதன்முதலாக கல்லடி பாலத்தின் நீர்மட்டம் உயர்ந்துள்ளது. மட்டக்களப்பு கல்லடி பாலத்தில் இருந்து மட்டக்களப்பு நகருக்குள் செல்லும் பாதைகள் அனைத்தும் நீரால் மூழ்கியுள்ளது.மட்டக்களப்பு வாவியின் நீர்மட்டம் உயர்ந்துள்ள மையே இதற்கான காரணமாகும்.

அதிக மழைவீழ்ச்சி காரணமாக அனேகமான குளங்களின் வான் கதவுகள் திறக்கப்பட்ட நிலையில் மட்டக்களப்பு வாவி நீர்மட்டம் உயர்ந்த காரணத்தால் வாவியை அண்டிய வீதிகள் அனைத்தும் வெள்ளத்தினால் மூழ்கியுள்ளது.

இந் நிலையிலே மக்கள் பல்வேறு போக்குவரத்து அசௌகரியங்களை எதிர்நோக்குவதுடன், பலரின் வீடுகள் நீரில் மூழ்கியுள்ளது.

இன்று காலையில் வேலைக்குச் செல்ல இருக்கும் பலர் நகருக்குள் செல்வதற்கு பல்வேறு சிரமங்களை எதிர்நோக்கியதனை காணக்கூடியதாக இருந்தது.

இப்படியான ஒரு நிலை இதுவரை மட்டக்களப்பு நகருக்குள் ஏற்படவில்லை. மேலும் நீர்மட்டம் உயரக்கூடிய வாய்ப்புக்கள் இருப்பதால் மக்கள் அவதானத்துடன் செயற்படுமாறு வேண்டிக் கொள்ளப்படுகின்றனர்.