நீண்ட விடுமுறைக்கான இடத்தைப் பிடித்துள்ள நாடு

நீண்ட விடுமுறைக்கான இடத்தைப் பிடித்துள்ள நாடு

உலகளாவிய e-commerce தளமான Ubuy India நடத்திய ஆய்வில், நீண்ட விடுமுறைக்காக உலகின் முதல் ஐந்து இடங்களுக்குள் இலங்கை தரவரிசைப்படுத்தப்பட்டுள்ளது.

மொத்த மதிப்பெண் 42.283 மற்றும் 1,127,010 தேடல் அளவுடன், மலிவு, கலாச்சார செழுமை, பாதுகாப்பு மற்றும் பயண வசதி போன்ற காரணிகளை கருத்தில் கொண்டு 100 நாடுகளுக்கு மேல் ஆய்வு செய்த அறிக்கையில் இலங்கை 4வது சிறந்த நாடாக பட்டியலிடப்பட்டுள்ளது.

அறிக்கையின்படி, இலங்கையில் குற்றச் சுட்டெண் 42.1 ஆகவும், உள்நாட்டுப் போக்குவரத்துத் தர மதிப்பெண் 7க்கு 4.4 ஆகவும் உள்ளது.

மேலும், தீவில் எட்டு யுனெஸ்கோ உலக பாரம்பரிய தளங்கள் மற்றும் சுமார் 40 பிரபலமான இடங்கள் உள்ளன, இது 0.12 பாரம்பரிய தளங்களின் அடர்த்தியையும் 1,000 சதுர கிலோமீட்டருக்கு 0.61 இடங்களையும் வழங்குகிறது.