சர்வதேச மாற்றுத்திறனாளிகள் தினம்

சர்வதேச மாற்றுத்திறனாளிகள் தினம்

டிசம்பர் 3 ஆம் தேதியன்று சர்வதேச மாற்றுத்திறனாளிகள் தினம் ஆகும். மாற்றுத்திறனாளிகள் எதிர்கொள்ளும் சவால்களில் கவனம் செலுத்த உதவுவதுடன் மன மற்றும் உடல் குறைபாடுகளுக்கு இடையில் பாகுபாடு காட்டாது உலகில் உள்ள அனைத்து மக்களுக்கும் வேலை, விளையாட்டு, ஆரோக்கியம் மற்றும் வெற்றிக்கான சம வாய்ப்புகள் இருப்பதை உறுதி செய்வதே இந்த நாள் ஆகும்.

அதுமட்டுமின்றி குறைபாடுகள் உள்ளவர்கள் சமூகத்தில் பங்களிப்பவர்களாகவும் மதிப்புமிக்கவர்களாகவும் இருக்கலாம். மேலும் மாற்றுத்திறனாளிகள் சாதாரண மனிதர்களை விட அதிக திறன் வாய்ந்தவர்களாக காணப்படுகின்றனர். அவ்வாறான மாற்றுத்திறனாளிகளை பாராட்டுவது எமது கடமை ஆகும்.