குறைந்தது 30 ஆண்டுகளுக்குள் உலகின் பிரபலமான 13 நகரங்கள் நீருக்குள் மூழுகும் அபாயம் இருப்பதாக நடுங்கவைக்கும் ஆய்வறிக்கை ஒன்று வெளியாகியுள்ளது.பொதுவாக கடல் மட்டம் உயரும் காரணத்தாலும் குடிநீர் பற்றாக்குறையாலும் மக்கள் நேரிடையாக பாதிக்கப்படவில்லை என்றால், அவர்கள் காலநிலை மாற்றத்தின் தாக்கத்தை உணர வாய்ப்பில்லை என்றே ஆய்வாளர்கள் கூறுகின்றனர்.
ஆனால் நமது பூமிப்பந்து நாளுக்கு நாள் வெப்பமடைந்து வருவதால், பல நகரங்கள், குறிப்பாக கடலோர நகரங்கள் பல கடலுக்குள் மூழ்கும் ஆபத்து ஏற்பட்டுள்ளதாக ஆய்வாளர்கள் எச்சரிக்கின்றனர்.2050க்குள் கடலுக்குள் மூழ்கும் அபாயத்தில் இருக்கும் பிரபலமான நகரங்களை ஆய்வாளர்கள் பட்டியலிட்டுள்ளனர். அதில், நெதர்லாந்தின் ஆம்ஸ்டர்டாம் முதலிடத்தில் உள்ளது. நெதர்லாந்து மெல்ல மெல்ல கடலில் மூழ்குவதாகவே நிபுணர்கள் தரப்பு சுட்டிக்காட்டுகின்றனர்.
இருப்பினும் புதிய தொழில்நுட்பத்தால் நெதர்லாந்து நிர்வாகம் தங்களை காத்துக்கொள்ளும் என்றே நிபுணர்கள் நம்புகின்றனர். கடல் மட்டம் உயருவதால் பாதிப்புக்குள்ளாகும் இன்னொரு நகரம் பிரித்தானியாவில் உள்ள பீற்றர்பரோ.
மூன்றாமிடத்தில் வியட்நாமின் ஹோ சி மின் நகரம். அதன் கிழக்கு மாவட்டங்களில் உள்ள Thủ Thiêm என்ற பெரிய சதுப்பு நிலம் நீரில் மூழ்கும் அபாயத்தில் உள்ளது. 2019ல் வெளியான தரவுகளின் அடிப்படையில் இந்த நகரமானது 16.2மி.மீ அளவில் கடலில் மூழ்கி வருவதாக தெரிவித்துள்ளனர்.
2050க்குள் இந்த நகரம் மொத்தமாக கடல் நீரால் மூடப்படும் என்றே கணித்துள்ளனர். இத்தாலியின் வெனிஸ் நகரம் ஒவ்வொரு ஆண்டும் சுமார் இரண்டு மில்லிமீற்றர்கள் நீரில் மூழ்குவதாகவே கூறப்படுகிறது.2050க்குள் இந்த நகரம் மொத்தமாக கடல் நீரால் மூடப்படும் என்றே கணித்துள்ளனர். இத்தாலியின் வெனிஸ் நகரம் ஒவ்வொரு ஆண்டும் சுமார் இரண்டு மில்லிமீற்றர்கள் நீரில் மூழ்குவதாகவே கூறப்படுகிறது.மட்டுமின்றி, கடுமையான வெள்ளப்பெருக்கு காரணமாக நகரின் சில பகுதிகள் நீருக்கடியில் மூழ்கும் அபாயத்தில் உள்ளன. தாய்லாந்தின் பாங்காக் நகரம் கடல் மட்டத்திலிருந்து சுமார் 1.5 மீற்றர் உயரத்தில் இருந்தாலும் மூழ்கிக் கொண்டிருப்பதாகவே கூறப்படுகிறது
ஈராக்கின் பாஸ்ரா நகரம் கடலில் மூழ்கும் ஆபத்தில் உள்ளது. இன்னொன்று அமெரிக்காவின் நியூ ஆர்லியன்ஸ். கிரேட்டர் நியூ ஆர்லியன்ஸ் பகுதியில் சுமார் 50 சதவிகிதம் கடல் மட்டத்திற்கு அடியில் உள்ளது.
இந்தியாவின் கொல்கத்தா நகரமும் 2050க்குள் கடலில் மூழ்கும் ஆபத்தில் உள்ளது. முன்னர் நம்பப்பட்டதை விட பல மில்லியன் மக்களை பாதிக்கப்படும் அபாயம் ஏற்பட்டுள்ளது. இதனால் ஒரு மிகப்பெரிய இடப்பெயர்ச்சி ஏற்பட வாய்ப்புள்ளதாகவும். கணிக்கப்படுகிறது. இருக்கும் என்றே கூறுகின்றனர். சீனாவின் ஷாங்காய் நகரமும் வெள்ளத்தில் மூழ்கும் அச்சுறுத்தலில் உள்ளது.
எகிப்தின் அலெக்ஸாண்டிரியா நகரம், மாலத்தீவில் உள்ள மாலே நகரம் 2050க்குள் 80 சதவிகிதம் மக்கள் குடியிருக்க முடியாத நிலையில் வெள்ளத்தால் மூழ்கும் நிலை ஏற்படும் என எச்சரிக்கின்றனர்.பிரேசிலின் ரியோ டி ஜெனிரோ நகரத்தின் 5 சதவிகித நிலப்பகுதி கடலில் மூழ்கும் நிலை ஏற்படும். 70 மில்லியனுக்கும் அதிகமான மக்கள் கடுமையான வெள்ளப்பெருக்கின் மிக மோசமான அச்சுறுத்தலில் உள்ளனர். 2050க்குள் இந்த நகரில் கடல் மட்டம் 8 அங்குலம் வரையில் உயரலாம் என்றே ஆய்வில் உறுதி செய்யப்பட்டுள்ளது.