கிளிநொச்சி (kilinochchi) இயக்கச்சியில் (Iyakachchi) அமைந்துள்ள றீ(ச்)ஷா ஒருங்கிணைந்த பண்ணையில் (Reecha Organic Farm) மண்புழு இயற்கை உர விற்பனை மேற்கொள்ளப்பட்டு வருகின்றது.
கிளிநொச்சி – பச்சிலைப்பள்ளி பிரதேச சபைக்குட்பட்ட இயக்கச்சி பகுதியில் அமைந்துள்ள ஓர் சுற்றுலாத் தலமே றீ(ச்)ஷா ஒருங்கிணைந்த பண்ணை ஆகும்.
இங்கு மீன்வளர்ப்பு, மரக்கறி பயிர்செய்கை, காளான் பண்ணை என பல புதிய முயற்சிகள் முன்னெடுக்கப்பட்டு வருகின்றன.
அந்த வகையில் தற்போது மண்புழு இயற்கை உரம் விற்பனையும் றீ(ச்)ஷாவில் மேற்கொள்ளப்படுகின்றது.
இந்நிலையில், விரும்பியவர்கள் பணத்தை செலுத்தி இயற்கை உரத்தை பெற்றுக் கொள்ளுமாறு கேட்டுக் கொள்ளப்படுகிறார்கள்.