புலமைப்பரிசில் பரீட்சையை மீண்டும் நடத்துமாறு பெற்றோர் கோரிக்கை!

புலமைப்பரிசில் பரீட்சையை மீண்டும் நடத்துமாறு பெற்றோர் கோரிக்கை!

இம்முறை இடம்பெற்ற தரம் ஐந்து புலமைப்பரிசில் பரீட்சை பிரச்சினை தொடர்பில் ஒரு வாரத்துக்குள் அறிக்கை சமர்ப்பிக்குமாறு இலங்கை மனித உரிமைகள் ஆணைக்குழு பரீட்சைகள் திணைக்களத்திற்கு ஆலோசனை வழங்கியுள்ளது.

பெற்றோர்களிடம் இருந்து கிடைக்கப் பெற்ற முறைப்பாட்டுக்கமைய விசாரணை முன்னெடுக்கப்பட்டதாக மனித உரிமைகள் ஆணைக்குழு வெளியிட்டுள்ள அறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளது.

பரீட்சைக்குத் தோற்றிய மாணவர்களின் மனநலம் கருதி இந்த புலமைப்பரிசில் பரீட்சை பிரச்சினைக்கு உடனடி தீர்வுகளை வழங்குமாறும் இலங்கை மனித உரிமைகள் ஆணைக்குழு பரீட்சை திணைக்களத்தை அறிவுறுத்தியுள்ளது. இதேவேளை, தரம் ஐந்து புலமைப்பரிசில் பரீட்சையை மீண்டும் நடத்துமாறு பரீட்சையில் தோற்றிய மாணவர்களின் பெற்றோர் கோரியுள்ளனர்.
சம்பவம் தொடர்பில் இலங்கை மனித உரிமைகள் ஆணைக்குழு விசேட விசாரணைகளை ஆரம்பித்துள்ளது. இதன்படி, குறித்த சம்பவம் தொடர்பில் வாக்குமூலம் பெற்றுக் கொள்வதற்காகக் கல்வி அமைச்சு, பரீட்சைகள் திணைக்களம் ஆகியவற்றின் அதிகாரிகள் மற்றும் பரீட்சைக்குத் தோற்றிய மாணவர்களின் பெற்றோர்கள் சிலர் மனித உரிமைகள் ஆணைக்குழுவிற்கு அழைக்கப்பட்டிருந்தனர்.