மின்சாரக் கட்டணக் குறைப்பு தொடர்பில் பகுப்பாய்வு ஆரம்பிக்கப்படவுள்ளதாக தெரிவித்துள்ளது.
குறித்த தகவல் இலங்கை மின்சார சபையின் (Ceylon Electricity Board) தலைவர் திலக் சியம்பலாபிட்டிய தெரிவித்துள்ளார்.
அதன் அறிக்கை பொது பயன்பாட்டு ஆணைக்குழுவிடம் (Public Utilities Commission of Sri Lanka) சமர்ப்பிக்கப்படும் என அவர் குறிப்பிட்டுள்ளார்.
பொதுப் பயன்பாட்டு ஆணைக்குழுவின் பதவிக்காலம் நிறைவடைந்துள்ளதாகவும், புதிய நாடாளுமன்றக் கூட்டத்தின் பின்னர் புதிய உறுப்பினர்கள் நியமிக்கப்படுவார்கள் எனவும் அவர் தெரிவித்துள்ளார்.
அத்துடன் மக்களுக்கு அதிகபட்ச நிவாரணம் கிடைக்கும் வகையில் மின்சார கட்டணத்தை குறைக்க வேண்டும் என்பதே புதிய அரசாங்கத்தின் எதிர்பார்ப்பு என இலங்கை மின்சார சபையின் தலைவர் மேலும் குறிப்பிட்டுள்ளார்.