வரி செலுத்தத் தவறியவர்களுக்கு இறைவரித் திணைக்களம் விடுத்துள்ள முக்கிய அறிவிப்பு

2023/2024 மதிப்பீட்டு ஆண்டிற்கான அனைத்து வருமான வரி செலுத்துதல்களும் செப்டம்பர் 30 திங்கட்கிழமைக்குள் முடிக்கப்பட வேண்டும் என்று உள்நாட்டு இறைவரி திணைக்களம் அறிவித்துள்ளது.

வருமான வரி செலுத்துவதைத் தவறினால் அல்லது தாமதப்படுத்தும் நபர்கள் சட்டரீதியான அபராதம் மற்றும் வட்டி செலுத்துதலை எதிர்கொள்ள நேரிடும் என்று உள்நாட்டு இறைவரி ஆணையாளர் நாயகம் செபாலிகா சந்திரசேகர தெரிவித்துள்ளார்.

எந்தவொரு வரிக்கான நிலுவைத் தொகையும் செப்டம்பர் 30 அல்லது அதற்கு முன் செலுத்தப்பட வேண்டும் என்று அவர் மேலும் வலியுறுத்தினார்.

திங்கட்கிழமைக்குப் பிறகும் ஏதேனும் வரிகள் செலுத்தப்படாமல் இருந்தால், அந்த நிலுவைத் தொகையை வசூலிக்க, உள்நாட்டு இறைவரிச் சட்டத்தில் குறிப்பிடப்பட்டுள்ளபடி, திணைக்களம் சட்ட நடவடிக்கைகளைத் தொடங்கும் என்று சந்திரசேகர எச்சரித்தார்.

மேலும் விவரங்களுக்கு, தனிநபர்கள் 1944 என்ற எண்ணைத் தொடர்பு கொள்ளலாம் அல்லது பிராந்தியத்தில் உள்ள உள்நாட்டு இறைவரி பிராந்திய அலுலகங்கத்தை தொடர்பு கொள்ளலாம் எனவும் தெரிவித்துள்ளார்.