அரசி விலை குறித்து வெளியான தகவல்

அரசாங்கத்தின் கட்டுப்பாட்டு விலையின் கீழ் அரிசியை சந்தைக்கு வெளியிட பாரிய அரிசி ஆலை உரிமையாளர்கள் தீர்மானித்துள்ளனர்.

குறித்த விடயத்தை, அரலிய குழுமத்தின் தலைவர் டட்லி சிறிசேன (Dudley Sirisena) இன்றையதினம் (28) அறிவித்துள்ளார்.

மேலும் இது குறித்து அவர் தெரிவித்ததாவது, இன்று முதல் அனைத்து அரிசி வகைகளையும் கட்டுப்பாட்டு விலையில் வர்த்தகம் செய்ய தீர்மானித்துள்ளோம்.நிபுன குழும தலைவர் மற்றும் நிவ் ரத்ன குழும தலைவர் ஆகியோரிடமும் கலந்துரையாடினேன், அவர்களும் இதற்கு இணக்கம் தெரிவித்தனர்.

இன்று முதல் அரிசியை அரசாங்கக் கட்டுப்பாட்டு விலையில் விற்கும் வகையில் எங்கள் அரிசியை விடுவிப்போம் என்று ஒட்டுமொத்த வர்த்தக சமூகத்திடமும் கேட்டுக்கொள்கிறேன்.ஜனவரி 20 வரை மட்டும் இந்த ஆதரவு வழங்கப்படும்.

இந்த திகதியை தேர்ந்தேடுத்தற்கு காரணம், சந்தைக்கு புதிய அறுவடைகள் வருகின்றன, அதன் போது எங்களுக்கு நெல்லுக்கு புதிய விலையும், அரசிக்கு புதிய விலையும் வேண்டும். அதனால் தான்.”என்றார்.