வெளியானது iOS 27 அறிவியல் & தொழில்நுட்பம்

வெளியானது iOS 27

1 min read
💬 0

வெளியானது iOS 27

iPhone பயனர்கள் ஆவலுடன் எதிர்பார்த்து வந்துள்ள புதிய iOS 27 மென்பொருள் அப்டேட்டை அப்பிள் நிறுவனம் நேற்று, இரவு (14) 10.30 மணிக்கு அதிகாரபூர்வமாக வெளியிடப்பட்டது.

இந்த புதிய அப்டேட், iPhone 11 மற்றும் அதற்குப் பின்னர் வெளியான மொடல்களுக்கு கிடைக்கும் என அறிவிக்கப்பட்டுள்ளது.

அதேவேளை, iOS 27இல் இடம்பெறும் மேம்பட்ட செயற்கை நுண்ணறிவு (AI) வசதிகள் மற்றும் புதிய தலைமுறை Siri 2.0 அம்சங்கள், iPhone 15 Pro மற்றும் அதற்குப் பின்னர் வெளியான மொடல்களுக்கு மட்டுமே கிடைக்கும் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

மேலும், புதிய இயங்குதளத்தின் மூலம் Siri-யின் இடைமுகம் மேம்படுத்தப்படுவதுடன், பல்வேறு செயலிகளின் செயல்திறனிலும் குறிப்பிடத்தக்க முன்னேற்றங்கள் கொண்டுவரப்படும் என எதிர்பார்க்கப்படுகிறது.

இதனால், புதிய iOS 27 அப்டேட்டில் இடம்பெறவுள்ள வசதிகளைப் பயன்படுத்த iPhone பயனர்கள் மத்தியில் எதிர்பார்ப்பு அதிகரித்துள்ளது.

மேலதிக தகவல்களுக்கு மாற்றம் செய்திகள் இணையத்தளத்தினுள் பிரவேசியுங்கள்.

மேலதிக தகவல்களை உடனுக்குடன் பெற்றுக்கொள்ள மாற்றம் செய்திகள் முகநூல் பக்கத்தை பின்தொடரவும்.

Showmini Suthantharaj

Showmini Suthantharaj

கட்டுரையாளர் · 1667 கட்டுரைகள்

மாற்றம் செய்திகள் குழுவின் உறுப்பினர். சமூக மாற்றம் மற்றும் மேம்பாட்டிற்காக எழுதுகிறார்.