இந்திய வேகப்பந்து வீச்சாளர் ஜஸ்பிரிட் பும்ரா (Jasprit Bumrah), டெஸ்ட் பந்துவீச்சாளர் தரவரிசை பட்டியலில் முதலிடம் பிடித்துள்ளார்.
சர்வதேச கிரிக்கெட் பேரவை இன்று (02) டெஸ்ட் அணியின் பந்துவீச்சாளர்களுக்கான தரப்படுத்தல் பட்டியலை வெளியிட்டுள்ளது.
சமீபத்தில் வங்கதேசத்துக்கு எதிரான கான்பூர் டெஸ்டின் போது மற்றொரு உலகத்தரம் வாய்ந்த ஆட்டத்தை வெளிப்படுத்தியதைத் தொடர்ந்து இந்த இடம் இவருக்கு கிடைக்கப்பெற்றுள்ளது.
இந்திய அணியின் சுழற்பந்துவீச்சாளர் ரவிச்சந்திரன் அஸ்வினை (Ravichandran Ashwin) பின்தள்ளி பும்ரா 870 புள்ளிகளுடன் முதலிடத்தைப் பெற்றுள்ளார்.
இதுவரை முதலிடத்திலிருந்த ரவிச்சந்திரன் அஸ்வின் ஒரு இடம் பின்தள்ளப்பட்டு 869 புள்ளிகளுடன் இரண்டாம் இடத்தில் உள்ளார்.
அதேநேரம் மூன்றாம் இடத்தில் அவுஸ்திரேலிய அணியின் ஜொஸ் ஹேசில்வூட்டும், நான்காம்இடத்தில் பெட் கம்மின்ஸூம் உள்ளனர்.
மேலும் 6வது இடத்தில் இந்திய அணி வீரர் ரவீந்திர ஜடேஜா உள்ளார். டெஸ்ட் பந்துவீச்சாளர்களுக்கான பட்டியலில் இலங்கை அணியின் பிரபாத் ஜயசூரிய 7ஆம் இடத்தில் தரப்படுத்தப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.