விசா பிரச்சினை தொடர்பான கணக்காய்வு நடவடிக்கை ஆரம்பம்

விசா பிரச்சினை தொடர்பான கணக்காய்வு நடவடிக்கை ஆரம்பம்

நாட்டில் கடந்த சில மாதங்களாக நிலவிய விசா பிரச்சினை தொடர்பான கணக்காய்வு நடவடிக்கைகள் தற்போது ஆரம்பிக்கப்பட்டுள்ளதாக தேசிய கணக்காய்வு அலுவலகம் தெரிவித்துள்ளது.

புதிய பாராளுமன்றம் கூடும்போது அது தொடர்பான கணக்காய்வு அறிக்கையை நிறைவுசெய்ய திட்டமிடப்பட்டுள்ளதாக கணக்காய்வாளர் நாயகம் W.P.C.விக்ரமரத்ன தெரிவித்துள்ளார்.

மேலும், இலத்திரனியல் கடவுச்சீட்டு(e-passport) விநியோகம் தொடர்பான கொள்முதல் செயன்முறையின் கணக்காய்வு அறிக்கையை நிறைவுசெய்வதற்கான நடவடிக்கைகள் எடுக்கப்பட்டுள்ளதாகவும் அவர் கூறியுள்ளார்.

விசா விநியோகம் இந்திய நிறுவனத்திற்கு வழங்கப்பட்டதன் பின்னர் ஏற்பட்ட செலவுகள் தொடர்பில் குறித்த கணக்காய்வு அறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளதாக கணக்காய்வாளர் நாயகம் மேலும் தெரிவித்துள்ளார்.