போலி பூச்சிகொல்லி மருந்துகள் குறித்து எச்சரிக்கை

போலி பூச்சிகொல்லி மருந்துகள் குறித்து எச்சரிக்கை

நாட்டில் போலி பூச்சிகொல்லி மருந்து வகைகள் விற்பனை செய்யப்படுவதாக எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.

பதிவு செய்யப்பட்ட பூச்சிக்கொல்லி மருந்துகள் என்ற போர்வையில் போலியான பூச்சிக்கொல்லிகள் தயாரிக்கப்பட்டு சந்தையில் விற்பனை செய்யப்படுவதாக எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.

போலி பூச்சி கொல்லி மருந்து வகைகளை விற்பனை செய்யும் கும்பல்கள் செயற்பட்டு வருவதாக பூச்சிக்கொல்லி பதிவாளர் அலுவலகம் தெரிவித்துள்ளது.
இந்தியாவில் இருந்து கொண்டு வரப்படும் போலி பூச்சிக்கொல்லி மருந்துகளை விட உள்ளூர் போலி பூச்சிக்கொல்லிகளின் விற்பனை அதிகரித்துள்ளது தெரியவந்துள்ளது.
இவ்வாறு தயாரிக்கப்பட்ட போலியான பூச்சிக்கொல்லி தம்புத்தேகமவில் உள்ள பூச்சி மருந்து கடை ஒன்றில் விற்பனை செய்யப்படவிருந்த நிலையில் மீட்கப்பட்டுள்ளது.

பூச்சிக்கொல்லி பதிவாளர் அலுவலக சோதனை பிரிவின் அதிகாரிகள் குறித்த போலி பூச்சிகொல்லி மருந்து வகைகளை மீட்டுள்ளனர்.

உள்ளூர் பதிவு செய்யப்பட்ட பூச்சிக்கொல்லி மருந்தைப் போன்றே இந்தப் போலி பூச்சிக்கொல்லியும் உற்பத்தி செய்யப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.
கத்தரிக்காய் செய்கையின் போது பூச்சிகளினால் ஏற்படக்கூடிய தாக்கத்தை தடுக்கப் பயன்படுத்தப்பட்ட 153 கிலோ பூச்சிக்கொல்லி மருந்து கைப்பற்றப்பட்டதாக பூச்சிக்கொல்லி மருந்துப் பதிவாளர் அலுவலகம் தெரிவித்துள்ளது.
மேலும், போலி பூச்சிக்கொல்லி மருந்து கொள்கலன்களின் லேபிள், வெளிப்புற உறை மற்றும் பேக்கேஜிங் ஆகியவை பதிவு செய்யப்பட்ட பூச்சிக்கொல்லியைப் போலவே தோற்றமளிக்கப்பட்டுள்ளதாக சுட்டிக்காட்டப்பட்டுள்ளது.

போலி பூச்சி கொல்லி வகைகள் கடைகளுக்கு குறைந்த விலையில் விற்பனை செய்யப்படுவதனால் உடை உரிமையாளர்கள் அவற்றை கொள்வனவு செய்து விவசாயிகளுக்கு விற்பனை செய்வதாக தெரிவிக்கப்படுகின்றது.