முச்சக்கர வண்டிகளுக்கு அறவிடப்படும் கட்டணத்தை 5 ரூபாவினால் குறைக்க தீர்மானிக்கப்பட்டுள்ளது.
நேற்று (09) முதல் இந்த தீர்மானம் நடைமுறைப்படுத்தப்பட்டுள்ளதாக மேல் மாகாண வீதி பயணிகள் போக்குவரத்து அதிகார சபையின் தலைவர் ஜீவிந்த கீர்த்திரத்ன தெரிவித்துள்ளார்.
இதற்கமைய முதலாவது கிலோமீற்றருக்கு இதுவரை அறவிடப்பட்ட 100 ரூபாய் கட்டணத்தில் மாற்றம் மேற்கொள்ளப்படவில்லை என்றும் குறிப்பிட்டுள்ளார்.
இரண்டாவது கிலோமீற்றரிலிருந்து அறவிடப்படும் கட்டணம் 5 ரூபாவினால் குறைக்கப்பட்டு, 85 ரூபாவாக அறவிடுவதற்கு தீர்மானித்துள்ளதாக அவர் மேலும் தெரிவித்துள்ளார்.
இதேவேளை, மாதாந்த எரிபொருள் விலை திருத்தத்திற்கமைய, ஒக்டோபர் 01) ஆம் திகதி முதல் நடைமுறைக்கு வரும் வகையில் பேருந்து கட்டணம் 4.24% திருத்தப்பட்டிருந்தது.
இந்த நிலையில், அதிக கட்டணம் வசூலிக்கும் பேருந்துகள் தொடர்பில் முறையிட ஆணைக்குழுவின் 1955என்ற தொலைபேசி இலக்கம் அல்லது 071 25 95 555 என்ற எண்ணுக்கு தொடர்பு கொள்ளுமாறு அறிவிக்கப்பட்டிருந்தமை குறிப்பிடத்தக்கது.