இலங்கையின் பொருளாதார வளர்ச்சி தொடர்பில் உலக வங்கி எதிர்வு கூறல்

இலங்கையின் பொருளாதார வளர்ச்சி தொடர்பில் உலக வங்கி எதிர்வு கூறல்

இந்த வருடத்திற்கான இலங்கையின் பொருளாதார வளர்ச்சி 4.4 சதவீதத்தை எட்டும் என உலக வங்கி கணித்துள்ளது.
இது கடந்த 6 மாதங்களுக்கு முன்பிருந்த எதிர்பார்க்கைகளை விட இது இரட்டிப்பாகும்.

சுற்றுலாத்துறை மற்றும் தொழில்துறைகளின் வலுவான செயற்றிறன் மூலம் இந்த வளர்ச்சி அடையப்படும் என உலக வங்கி எதிர்வுகூறியுள்ளது.
எனினும் இலங்கையின் தற்போதைய அபிவிருத்தி மீட்சி பலவீனமாக உள்ளது எனவும் பொருளாதார ஸ்திரத்தன்மையைப் பேணுதல், கடன் மறுசீரமைப்பை வெற்றிகரமாக முன்கொண்டு செல்ல வேண்டும் என உலக வங்கி தெரிவித்துள்ளது.

அத்துடன் நாட்டில் வறுமையைக் குறைக்க கட்டமைக்கப்பட்ட மறுசீரமைக்கப்பட்ட திட்டங்களைத் தொடர வேண்டும் என உலக வங்கி வலியுறுத்தியுள்ளது.

ஏற்றுமதியை அதிகரிப்பது, வெளிநாட்டு முதலீட்டைக் கொண்டுவரல், பெண் தொழிலாளர் பங்கேற்பை அதிகரித்தல், உற்பத்தித் திறனை மேம்படுத்தல் மற்றும் வறுமை, உணவுப் பாதுகாப்பின்மை மற்றும் நிதித் துறையில் உள்ள பாதிப்புகள் போன்ற சவால்களை எதிர்கொள்வதை நோக்கமாகக் கொண்ட முக்கிய சீர்திருத்தங்களும் உள்ளக்கப்பட வேண்டும் என உலக வங்கி அறிவுறுத்தியுள்ளது.