உலகம் முழுதும் போர் சூழல் மூண்டிருக்கும் நிலையில் இந்த ஆண்டு அமைதிக்கான நோபல் பரிசு ஜப்பானிய அமைப்பான நிஹான் ஹிடாங்கியோவுக்கு வழங்கப்பட்டது.
ஹிரோஷிமா மற்றும் நாகசாகியில் இருந்து அணுகுண்டில் இருந்து தப்பியவர்களின் நலனுக்காக பாடுபட்டதற்காகவும் , அணு ஆயுதங்கள் இல்லாத உலகத்தை அடைவதற்கான அதன் முயற்சிகளுக்காகவும், அணு ஆயுதங்களை மீண்டும் ஒருபோதும் பயன்படுத்தக்கூடாது என்பதை தொடர்ந்து வலியுறுத்தி வருவதற்காகவும் நோபல் பரிசு வழங்கப்படுகிறது. அடுத்த ஆண்டு ஹிரோசிமா, நாகசாகியில் அமெரிக்கா அணுகுண்டு வீசி தாக்குதல் நடத்தியதன் 80 வது நினைவாண்டு என்பது குறிப்பிடத்தக்கது.