சந்தையில் முட்டை விநியோகம் தடைப்பட்டாலோ அல்லது மொத்த முட்டை விநியோக நடவடிக்கை மட்டுப்படுத்தப்பட்டாலோ சட்ட நடவடிக்கை எடுக்கப்படும் என நுகர்வோர் விவகார அதிகார சபையின் ( Consumer Affairs Authority) தகவல் பிரிவின் பணிப்பாளர் அசேல பண்டார தெரிவித்துள்ளார்.
முட்டை விலையை நிர்ணயம் செய்ய விலை சூத்திரம் கொண்டு வர வேண்டும் என முட்டை வர்த்தக சங்கங்கள் அரசுக்கு விடுத்துள்ளன.
முட்டை ஒன்றின் விலை 45 ரூபாவைத் தாண்டி உள்ளது. இவ்வாறு, முட்டை விலை அதிகரிப்பு தொடர்பில் பலதரப்பட்ட கருத்துக்கள் முன்வைக்கப்பட்டு வருகின்ற நிலையில், இது குறித்து மக்களும் தொடர் குற்றச்சாட்டை முன்வைத்து வருகின்றனர்.