குறைந்த மாவுச்சத்து, மற்றும் அதிக நார்ச்சத்து, மற்றும் உடலுக்கு தேவையான trace elements எனப்படும் நுண் ஊட்டச் சத்துக்கள் மிக்க இக் கம்பு, நீரிழிவு நோயாளர்களுக்கு மிகவும் உகந்தது.
குழந்தைகள் இதன் நல்ல வாசனையாலும், நிறத்தாலும் கவரப்பட்டு “கிறீன் ரைஸ்” என்று விரும்பி உண்பர்.
காலை உணவான இடியப்பம், பிட்டு ரொட்டி தயாரிப்பதற்கு எடுக்கும் சிரமத்தை மிகவும் குறைக்கலாம்.
தேங்காய் சம்பல், மற்றும் வழக்கமான கறிகளுடன், சோறு, பிட்டுக்குப் பதிலாக உண்ணலாம்.
1/2 மணி நேரம் நீரில் ஊறவிட்ட கம்பு சிறுதானியத்தை, 2 முறை அரிக்கும் சட்டியில் மண் இன்றி அரித்து, ரைஸ் குக்கரில் 1 கப் சிறுதானியத்துக்கு 2 கப் தண்ணீர் எனும் அளவில் தண்ணீர் விட்டு (தேவையானால் சிறிது உப்பு சேர்த்து) சமைத்தால் நல்ல வாசனை கொண்ட, சுவையான கம்பஞ்சோறு தயார்.
இது அரிசி சோறு சமைக்க எடுக்கும் நேரத்தை விட 1,1/2 மடங்கு அதிக நேரம் எடுக்கும்.
இக் கம்பினைத் திரித்து மாவாக்கி, தேங்காய்ப்பாலுடன் மிகவும் சுவையான களி, கூழ் செய்தும் குழந்தைகளுக்குக் கொடுக்கலாம்.
உளுந்துடன், அரிசிக்குப் பதிலாக கம்பினை சேர்த்து ஊறவைத்து அரைத்து தோசை, இட்லி செய்யலாம்.
✍️ செந்தூரன் (CSJ)