பெரும்போகத்திற்கான உர மானியம் வழங்கும் முதற்கட்ட பணிகள் நிறைவடைந்தன
அதன்படி, 23 மாவட்டங்களுக்கு, 86,162 ஹெக்டேர் பரப்பளவில், உர மானியம் வழங்கப்பட்டுள்ளது.
நாடளாவிய ரீதியில் 129,229 விவசாயிகளுக்கு 1.29 பில்லியன் ரூபா வழங்கப்பட்டுள்ளதாக கமநல சேவைகள் திணைக்களம் தெரிவித்துள்ளது.
இதேவேளை, பெருந்தோட்ட நடவடிக்கைகள் எவ்வாறு முன்னெடுக்கப்படுகின்றன என்பதைப் பொறுத்து விவசாயிகளுக்கு உர மானியம் வழங்கப்படும் என்று கமநல சேவைகள் ஆணையாளர் நாயகம் ரோஹண ராஜபக்ஷ தெரிவித்துள்ளார்.
கிரித்தலை மற்றும் கவுதுல்ல நீர்த்தேக்கங்களில் இருந்து நீர் திறந்து விடப்படுவதில் தாமதம் ஏற்பட்டதன் காரணமாக பொலன்னறுவை மாவட்டத்தின் சில பகுதிகளில் உள்ள விவசாயிகளுக்கு இந்த மானியத்தை வழங்குவதில் தாமதம் ஏற்பட்டுள்ளது.