அரசாங்க தொழிலுக்காக காத்திருப்போருக்கு முக்கிய அறிவிப்பு

அரசாங்க தொழிலுக்காக காத்திருப்போருக்கு முக்கிய அறிவிப்பு

பொதுச் சேவை ஆணைக்குழுவில் காணப்படும் பதவி வெற்றிடங்களை நிரப்ப விருப்பமுள்ளவர்களிடமிருந்து விண்ணப்பங்கள் கோரப்படுகின்றன.

இலங்கை ஜனநாயக சோசலிசக் குடியரசின் அரசியலமைப்பின் 54வது சரத்தில் கூறப்பட்டுள்ளபடி, ஒருவர் நாடாளுமன்ற உறுப்பினராகவோ, மாகாண சபை உறுப்பினராகவோ அல்லது உள்ளூராட்சி மன்ற உறுப்பினராகவோ இருந்தால், அத்தகைய நபர் இதற்கு விண்ணப்பிக்க முடியாது.

அரச அதிகாரியாகவோ, நீதித்துறை அதிகாரியாகவோ அரச பணியில் ஈடுபடுபவர் இந்தப் பதவிகளுக்கு விண்ணப்பித்து அந்தப் பதவியைப் பெற்றால், அவர் முந்தைய பணியை நிறுத்த வேண்டும் என்றும், அந்த நபர் பதவியில் இருந்து தகுதி நீக்கம் செய்யப்படுவார் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
இதற்கான விண்ணப்பங்கள் நாடாளுமன்ற இணையத்தளமான www.parliament.lk இல் ‘பொதுச் சேவை ஆணைக்குழுவிற்கான உறுப்பினர்கள் நியமனம்’ என்ற பெயரில் இணைப்புகளின் கீழ் வெளியிடப்பட்டுள்ளன.


இந்த படிவத்தின்படி தயாரிக்கப்பட்ட மற்றும் பூர்த்தி செய்யப்பட்ட விண்ணப்பங்களை 23 செப்டெம்பர் 2024 அன்று அல்லது அதற்கு முன்னர் பின்வரும் முகவரிக்கு பதிவு செய்யப்பட்ட தபால் மூலம் அனுப்பப்பட வேண்டும் எனவும் அறிவுறுத்தப்பட்டுள்ளது.


அரசியலமைப்பு சபையின் பொதுச் செயலாளர், அரசியல் நிர்ணய சபை – அலுவலகம், இலங்கை நாடாளுமன்றம். ஸ்ரீ ஜெயவர்தனபுர, கோட்டை அல்லது constitutionalcouncil@parliament.lk என்ற மின்னஞ்சல் முகவரிக்கு மின்னஞ்சல் அனுப்பி வைக்கலாம் என அறிவிக்கப்பட்டுள்ளது.

உறை/மின்னஞ்சலின் மேல் இடது மூலையில் ‘பொதுச் சேவை ஆணைக்குழு உறுப்பினர்கள் நியமனம்’ என்று குறிப்பிட வேண்டும் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.