கழிவுகளே புதுமைக்கான தூண்டுதல்

கழிவுகளே புதுமைக்கான தூண்டுதல்

தலவாக்கலை சாந்த கூம்ஸ் மகா வித்தியாலயத்தில் பயிலும் 14 வயது மாணவன் டிக்ஸன் தனது சுற்று சூழலில் உள்ள கழிவுப்பொருட்களை பயன்படுத்தி இலத்திரனியல் விளையாட்டுப்பொருட்கள் மற்றும் Bluetooth speaker போன்ற தொழிநுட்ப கருவிகளை உருவாக்கியுள்ளார்.

இந்த திறமை மட்டுமல்லாது இவர் பாடசாலை மற்றும் தேசிய மட்ட அளவில் chess போட்டிகளிலும் பங்குபற்றி உள்ளார்.

அவருடன் கலந்துரையாடிய போது தனது இலட்சியம் ஒரு பொறியியலாளர் ஆகவேண்டும் என கூறினார்.

டிக்ஸன் மேலும் பல படைப்புக்களை படைத்து முன்னேற மாற்றம் செய்திகள் சார்பாக மனமார்ந்த வாழ்த்துக்களை தெரிவித்துக்கொள்கிறோம்.