போக்குவரத்து நடவடிக்கைகளுக்கு தடை

போக்குவரத்து நடவடிக்கைகளுக்கு தடை

தொடர் மழை காரணமாக நல்லதண்ணி மஸ்கெலியா பிரதான வீதியில் மண்சரிவு காரணமாக போக்குவரத்து நடவடிக்கைகள் தடை ஏற்பட்டுள்ளது.

இச் சம்பவம் இன்று மாலை 4.30.க்கு இடம் பெற்று உள்ளது என நல்லதண்ணி பொலிஸ் நிலைய பொறுப்பதிகாரி சீ.ஜ.வீரசேகர தெரிவித்தார்.

நல்லதண்ணி மஸ்கெலியா பிரதான வீதியில் உள்ள மோகினி எல்ல பகுதியில் மண் திட்டுகள் சரிவுகள் ஏற்பட்டு உள்ளதால் அவ் வழியாக செல்லும் பேருந்துகள் லக்சபான தோட்ட வாழ மலை பிரிவு வழியாக திருப்பி விட பட்டுள்ளது.

மேலும் இது குறித்து நோர்வூட் பிரிவில் உள்ள வீதி அபிவிருத்தி அதிகாரசபையின் கவனத்திற்கு கொண்டு வரப் பட்டுள்ளது என அவர் கூறினார்.

மஸ்கெலியா நிருபர்