சாதாரண தர மாணவர்களுக்கான அறிவிப்பு

சாதாரண தர மாணவர்களுக்கான அறிவிப்பு

2024 (2025) சாதாரண தர பரீட்சைக்கு விண்ணப்பிப்பதற்கான காலக்கெடுவை டிசம்பர் 10, 2024 வரை பரீட்சைகள் திணைக்களம் நீடித்துள்ளது.

நாடளாவிய ரீதியில் அண்மைக்காலமாக நிலவும் மோசமான காலநிலை காரணமாக இந்த தீர்மானம் எடுக்கப்பட்டுள்ளதாக பரீட்சைகள் ஆணையாளர் நாயகம் அமித் ஜயசுந்தர தெரிவித்துள்ளார்.

அதன் உத்தியோகபூர்வ இணையத்தளங்களான www.doenets.lk அல்லது www.onlineexams.gov.lk/eic ஊடாக ஆன்லைன் சமர்ப்பிப்புகள் மட்டுமே ஏற்றுக்கொள்ளப்படும் என திணைக்களம் வலியுறுத்தியுள்ளது.

பாடசாலை விண்ணப்பதாரர்கள் தங்கள் பாடசாலை முதல்வர்கள் மூலம் விண்ணப்பிக்க வேண்டும், அதே நேரத்தில் தனியார் விண்ணப்பதாரர்கள் சுயாதீனமாக விண்ணப்பங்களை சமர்ப்பிக்கலாம்.

விசாரணைகளுக்கு, விண்ணப்பதாரர்கள் ஹாட்லைன் 1911ஐத் தொடர்பு கொள்ளலாம், 0112784208/0112784537/0112785922 என்ற எண்ணை அழைக்கலாம் அல்லது gceolexamsl@gmail.com என்ற மின்னஞ்சல் முகவரிக்கு மின்னஞ்சல் அனுப்பலாம்.