சிவனொளிபாத மலை பருவகாலம்

சிவனொளிபாத மலை பருவகாலம்

எதிர் வரும் 13 ம் திகதி இரத்தினபுரி கல்பொத்தாவில ரஜமஹா விகாரையில் இருந்து நான்கு வழியாக சிவனடி பாத மலைக்கு சுவாமிகள், ஆபரணங்கள் மற்றும் பூஜை பொருட்கள் கொண்டு வர ஏற்பாடு நடை பெற்று வருவதாக சிவனடி பாத மலைக்கு பொறுப்பான ஊவா வெரலஸ்ஸ பல் கலை கலத்தின் பீடாதிபதி தேரர் பெங்கமுவே தம்ம தின்ன தெரிவித்தார்.

அவர் மேலும் கூறுகையில் 14 ம் திகதி பௌர்ணமி நாளில் ஆரம்பிக்கப்பட உள்ளது.

2024/2025 பருவகால தந்தை யொட்டி இரத்தினபுரி கல்பொத்தாவில ரஜமஹா விகாரையில் இருந்து பலாபத்வில வழியாகவும், குருவிற்ற வழியாகவும்,பலாங்கொட பொகவந்தலாவ வழியாகவும், இரத்தினபுரி, காவத்தை,அவிஸ்சாவலை, தெகியோவிற்ற,கரவனல்ல,எட்டியாந்தொட்ட, கித்துல்கல,கினிகத்தேன,வட்டவளை, ஹட்டன்,டிக்கோயா, நோர்வூட், மஸ்கெலியா, வழியாக நல்லதண்ணி நகரில் உள்ள பௌத்த மத்திய நிலையத்திற்கு கொண்டு வரப்படும்.

13 ம் திகதி இரவு மலைக்கு லக்சபான இராணுவ முகாம் அதிகாரிகள் மற்றும் சிப்பாய்கள் மூலம் மலை உச்சிக்கு அலங்கரிக்க பட்ட பல்லாக்கில் கொண்டு சென்று அங்கு பௌத்த மத துறவிகள் இணைந்து சுவாமிகள் பிரதிஷ்டை செய்து 14 ம் திகதி அதிகாலை முதல் பிரித் ஓதும் வைபவம் நடைபெறும்.

அதனைத் தொடர்ந்து 2024/2025 க் கான சிவனடி பாத மலை பருவகாலம் ஆரம்பமாகி 2025 வைகாசி மாதம் வரும் வைகாசி விசாகம் தினத்தன்று நிறைவுக்கு வரும்.

தொடர்ந்து ஆறு மாதங்கள் இடம் பெறும் பருவத்தில் மலைக்கு தரிசனம் செய்ய செல்லும் யாத்திரிகர்கள் பொலித்தீன், பிளாஸ்டிக் போத்தல்கள்,உக்காத பொருட்கள் கொண்டு செல்வது தடைசெய்யப்பட்டுள்ளது.

போதைப் பொருள் வர்த்தகம் சட்ட விரோதமாக முறையில் எவ்விதமான செயல்களையும் ஈடுபடகூடாது எனவும் 24 மணி நேரமும் பாதுகாப்பு அதிகாரிகள் சிவில் உடையில் கண்காணிப்பு மேற் கொண்டு வருவார்கள் என தெரிவித்தார்.

மேலும் தற்போது இந்த பகுதியில் கன மழை காரணமாக நீர் தேக்கங்களின் நீர் மட்டம் வெகுவாக உயர்ந்து உள்ளதால் நீர் தேக்கங்களில் நீராட வேண்டாம் எனவும் நீராடுவதற்கு ஒதுக்கப்பட்ட இடங்களில் மட்டுமே நீராடுமாறு கேட்டு கொள்ளப்படுகின்றனர்.

13/12/2024 அன்று கல்பொத்தாவில ரஜமஹா விகாரையில் இருந்து நான்கு வழியாக கொண்டு வரப்படும் சுவாமிகள் அனைத்தும் மிகவும் பாதுகாப்பான முறையில் அலங்கரிக்கப்பட்ட வாகனங்களில் கொண்டு வரும் போது பக்தர்கள் தரிசனம் செய்ய ஏற்பாடு செய்யப்பட்டு உள்ளது.

மஸ்கெலியா தினகரன் விசேட நிருபர்

புகைப்படங்கள் – ரிச்சர்ட் அனோஜன்