அமிர்தா நிறுவனமானது மட்டக்களப்பு மாவட்டத்தில் தொழில்துறையினர், தொழில் முயற்சியாளர்கள், தன்னார்வ தொண்டு நிறுவனங்களுடன் இணைந்து அவர்களுக்கு தேவையான நிதி நிர்வாக மற்றும் தொழில்நுட்பம் சார் ஆலோசனைகள் மற்றும் சேவைகளை வழங்கி வருகிறது.
இவற்றின் மூலம் தொழில் வாய்ப்புகளை இளைஞர்களுக்கு பெற்றுக் கொடுக்கும் நோக்கத்துடனே செயல்பட்டுக் கொண்டிருக்கின்றது. அந்த வகையில் தொழில் முயற்சிக்கான ஆரம்ப சேவைகள், நிதி முகாமைத்துவ சேவைகள், கணினி தொழில்நுட்ப சேவைகள் மற்றும் பயிற்சிகள் ஒருங்கிணைப்பு சேவைகள் ஆகியவற்றை வழங்கி வருகின்றது.
அந்த வகையில் நீண்ட காலமாக அமிர்தா நிறுவனத்திடம் சேவைகளை பெறுவதுடன் தொடர்ச்சியாக இணைந்து பயணிக்கும் வாடிக்கையாளர்களை சந்திக்கும் வருட இறுதி நிகழ்வு இன்று நடைபெற்றது.