விவேகானந்தரின் 163-வது பிறந்தநாள் ஜனவரி 12 ஆம் திகதியை நினைவுகூரும் பொருட்டு, விவேகானந்த தொழில்நுட்வியல் கல்லூரி ஒவ்வொரு வருடமும் இந்த காலப்பகுதியில் இரத்ததான நிகழ்வினை மட்டக்களப்பு போதனா வைத்தியசாலை இரத்த வங்கியுடன் இணைந்து நடாத்துவது வழமையானதொன்றாகும். அதன் அடிப்படையில் 16.01.2025 அன்று காலை 9.30 மணிக்கு கல்லூரி வளாகத்தில் இரத்ததான முகாமை சிறப்பாக ஏற்பாடு செய்தது. மனித நேயத்தை பரப்பும் முயற்சியாக, இந்நிகழ்வில் கல்லூரியின் பணிப்பாளர், அதிபர், போதனாசிரியர்கள், சேவையாளர்கள் மற்றும் பயிலுனர்களும் தன்னார்வத்துடன் இணைந்து செயல்பட்டனர். விழாவின் ஆரம்பத்தில், பயிலுனர்களுக்கு இரத்ததானத்தின் தேவையும், அதனுடைய அறிவியல் மற்றும் மனிதாபிமான முக்கியத்துவமும் விளக்கப்பட்டது.
இச்சிறப்புத் நிகழ்ச்சியில், 25 இளைஞர், யுவதிகள் தங்களின் இரத்தத்தை தானமாக அளித்தனர். தன்னலமற்ற சேவையின் அவசியத்தை உணர்ந்த இச்செயல்பாட்டின் மூலம் பல உயிர்களுக்கு துயரத்திலிருந்து விடிவானம் கிடைத்தது. இந்நிகழ்ச்சிக்கு, கல்லூரியின் அனைத்து சேவையாளர்கள், பயிலுனர்கள மற்றும் சமூக ஆர்வலர்கள் ஆதரவு அளித்து, விழாவின் முக்கியத்துவத்தை வலியுறுத்தினர்.
இரத்ததானத்தின் அவசியம்
இரத்த தானம் என்பது ஒருவரின் உயிர் காக்கும் புனித செயலாகும். உலகம் முழுவதும் தினமும் ஆயிரக்கணக்கானோர் அவசர சூழ்நிலைகளில் இரத்தத்தை தேவைப்படுகிறார்கள். விபத்துகள், அவசர சிகிச்சைகள், மற்றும் சில நோய்களின் காரணமாக சிலர் நேரடியாக உயிரிழக்கின்றனர். ஒரு துளி இரத்தம், ஒரு உயிரின் முடிவை மாற்றக்கூடிய சக்தி வாய்ந்தது.
விவேகானந்தர் கூறியதுபோல, “நாம் எல்லோரும் ஒரே மனிதகுலத்தின் அங்கங்கள்” என்ற கருத்தை இந்நிகழ்வு உயிர்ப்பித்து காட்டியது. கல்லூரியின் மாணவர்களுக்கு மட்டும் அல்லாமல், சமூகத்துக்கும் இதன் மூலம் தன்னலமற்ற சேவை மனப்பான்மையை ஊட்டிய விதமாக அமைந்தது.
இளம் தலைமுறையின் பங்கு
இந்நிகழ்ச்சியில் 25 கல்லூரி பயிலுனர்கள், முந்நாள் பயிலுனர்கள், சேவையாளர்கள் தங்களின் இரத்தத்தை தானமாக அளித்து சிறந்த உதாரணமாக செயல்பட்டனர். இவ்வாறான நிகழ்வுகள், இளைஞர்களை சமூக நலன் சார்ந்த செயல்களில் ஈடுபடுத்துவதோடு, அவர்களில் பொறுப்புணர்வையும் மனித நேயத்தையும் வளர்க்கிறது. இன்றைய இளம் தலைமுறை ஒரு புதிய மாற்றத்தை ஏற்படுத்தும் தலைவர்கள் என்பதை நிகழ்வின் வெற்றியே உறுதிப்படுத்தியது.
இவ்வாறான இரத்ததான முகாம்களை மேலும் பல இடங்களில் நடத்தும் முயற்சிகளை தொடர்ந்து மேற்கொள்ள வேண்டும் என்ற முனைப்புடன், கல்லூரி நிர்வாகமும், பயிலுனர்களும் உறுதிமொழி எடுத்தனர். “உங்கள் இரத்த துளிகள் புதிய சுவாசத்திற்கு வழிவகுக்கும்!” என்கிற கருத்தை அனைவரும் முன்வைத்தனர்.
இப்படியான மனிதாபிமான முயற்சிகள் அனைத்துக்கும் சமூக ஆதரவும், ஊக்கமும் தேவை. இரத்ததானம் ஒரு ஒற்றை செயல் போல தோன்றினாலும், அது ஒரு புதிய வாழ்க்கைக்கு காரணமாகிறது. இதேபோன்று, விவேகானந்தரின் கொள்கைகளை ஆதரித்து, மனிதநேயம் நிறைந்த ஒரு சமுதாயத்தை உருவாக்குவோம்.
“உங்கள் ஒரு துளி இரத்தம், ஓர் இனிய நாளை உருவாக்கும்!”
மேலதிக விபரங்களை தெரிந்து கொள்ள https://maatramnews.com
Blood Donation Camp in Honor of Swami Vivekananda’s 163rd Birth Anniversary
The 163rd birth anniversary of Swami Vivekananda was celebrated with great enthusiasm and dedication by Vivekananda Institute of Technology, which hosted a significant blood donation camp on 16th January 2025, at 9:30 AM in the college premises. This annual event has become a hallmark of the institution’s commitment to promoting social welfare and honoring the values and teachings of Swami Vivekananda, whose vision for youth empowerment and service to humanity remains timeless.
The camp witnessed meticulous planning and wholehearted involvement from students, faculty members, and staff. The venue was adorned with banners bearing Swami Vivekananda’s inspirational quotes, such as “Arise, awake, and stop not till the goal is reached,” reflecting the essence of his teachings. The event commenced with a brief inaugural ceremony where the college Director, Principal addressed the gathering, emphasizing the importance of blood donation as an act of compassion and responsibility.
The event commenced with a brief yet impactful inaugural ceremony. The college principal inaugurated the camp by addressing the gathering, highlighting the significance of blood donation as both an act of humanity and a social responsibility. “Donating blood is not just about saving lives—it’s about embodying compassion and fulfilling our duty towards society,” he stated, setting a motivational tone for the day. His words encouraged everyone present to embrace the true spirit of service and recognize the collective power of small acts of kindness.
The camp closed with a heartfelt vote of thanks to all participants, organizers, and the medical team, followed by the resonating message:
“Your single drop of blood is a lifeline for someone in need. Together, we can save lives and build a better tomorrow.”
This inspiring initiative reaffirms the significance of community-driven efforts and sets a benchmark for future endeavors. As Swami Vivekananda once said, “In a day, when you don’t come across any problems, you can be sure that you are on the wrong path.” With this thought, the event concluded on a note of optimism, encouraging everyone to embrace challenges and contribute positively to society.
Let this celebration of Swami Vivekananda’s legacy inspire us to continue making a difference, one step at a time, for a brighter and better world.
To receive more news visit https://maatramnews.com