Vivekananda College of Technology

வளமான எதிர்காலத்திற்கான தூரிகை

விவேகானந்த தொழில்நுட்பவியல் கல்லூரியின் தொலைநோக்கை மையப்படுத்தியதாக இளைஞர்களின் தொழில்கல்விக்கான வலுவூட்டல் எனும் தொனிப்பொருளில் பல்வேறுபட்ட செயற்திட்டங்களை முன்னேடுத்து வருகின்றமை குறிப்பிடதக்கதொரு விடயமாகும்.

அதனடிப்படையில் முல்லைத்தீவு, திருகோணமலை வெருகல் முகத்துவாரம். மட்டக்களப்பு மேற்கு வலயத்தில் கரடியனாறு போன்ற பிரதேசங்களில் விவேகானந்த தொழில்நுட்பவியல் கல்லூரி கணணி பயிற்சி நிலையங்களை நடாத்தி சமூகத்தின் மத்தியில் கணணி அறிவை மேம்படுத்தி வருகின்றது.

அதுமட்டுமல்லாது காரைதீவில் அமைந்துள்ள இராமகிருஸ்ண மிஷன் மனித மேம்பாட்டு பயிற்சிநிலையத்துடன் இணைந்த கணணி கற்றல் கூடம் (https://maatramnews.com/events/vcot-community-college-expands-its-reach-to-ampara/) சமீபத்தில் வெகு விமர்சையாக திறந்து வைக்கப்பட்டமை குறிப்பிடத்தக்க விடயமாகும்.

அந்த வகையில் காரைதீவு மண்ணில் எமது இலக்கு நோக்கிய பயணத்தின் ஆரம்பகட்டமாக இன்று எமது அடிப்படை கணணி பயிற்சி நெறிக்கான முதற்கட்ட நிகழ்வு நடத்தப்பட்டது. இதில் விவேகானந்த தொழிநுட்பவியல் கல்லூரியின் திட்ட முகாமையாளர், விவேகானந்த சமுதாய அறக்கட்டளையின் திட்ட முகாமையாளர் உட்பட சேவையாளர்களும் கலந்து கொண்டனர்.

இந்நிகழ்வில் காரைதீவு, அம்பாறை, சாய்ந்தமருது, கல்முனை மற்றும் நீலாவனை ஆகிய பிரதேசங்களில் வசிக்கும் பல பயிலுனர்கள் கலந்து கொண்டு பயிற்சிநெறி பற்றிய போதியளவு விளக்கங்களையும் தெரிந்து கொண்டதோடு கலந்துரையாடல்களை மேற்கோண்டு பயிற்சிநெறி ஆரப்பிக்கப்படுவதன் நோக்கங்களை தெரிந்துகொண்டதோடு தங்களது பாடநெறிக்கான நேர அட்டவணையையும் பெற்றுக்கொண்டனர்.

மேலதிக தகவல்களுக்கு மாற்றம் செய்திகள்

Vivekananda College of Technology Strengthening Skills and Technology

Vivekananda College of Technology (VCOT) has been consistently advancing various initiatives aimed at empowering youth through technical education, aligning with its long-term vision of skill development and technological empowerment.

As part of this mission, VCOT has been operating computer training centers in several regions, including Mullaitivu, Verugal Muthur in Trincomalee, and Karadiyanaru in the Western Zone of Batticaloa. These centers play a crucial role in enhancing digital literacy and IT skills within the local communities.

Additionally, a new computer learning center was recently inaugurated with great enthusiasm in collaboration with the Ramakrishna Mission Human Development Training Center in Karaitivu. This milestone marks another significant step in VCOT’s expansion efforts, furthering access to quality IT education. (More details: VCOT Community College Expansion)

As part of this initiative, the first phase of the Basic Computer Training Course was officially launched today in Karaitivu. The event was graced by the presence of VCOT’s Project Manager, the Project Manager of Vivekananda Community Foundation, and several dedicated service personnel.

This event brought together numerous trainees from Karaitivu, Ampara, Saindamaruthu, Kalmunai, and Neelavanai, providing them with comprehensive insights into the training program. Attendees actively engaged in discussions about the course objectives, learning outcomes, and training methodology. Additionally, they received their course schedules, marking the beginning of their journey toward gaining essential computer skills.

Through such initiatives, VCOT continues to pave the way for technological empowerment, ensuring that communities across different regions gain access to quality education and skill development opportunities, ultimately contributing to a more prosperous and digitally-equipped future.

For more news visit us Maatram News