Diversity Market

பெண்கள் முன்னேற்றத்திற்கு வலுச்சேர்க்கும் பன்முக சந்தை கண்காட்சி

மட்டக்களப்பு மாவட்ட செயலகமும் CHRYSALIS நிறுவனமும் இணைந்து சர்வதேச மகளிர் தினத்தினை முன்னிட்டு, “நிலையான எதிர்காலத்தை உருவாக்குவதற்காக அவள் வலுவான வழிகாட்டியாக இருப்பாள்” என்ற தலைப்பின் கீழ், பெண்கள் சுயதொழில் முயற்சிகளை ஊக்குவிக்கும் வகையில் சிறப்பான பன்முக சந்தை கண்காட்சியை நடாத்திக்கொண்டிருக்கிறது.

இந்த கண்காட்சி இன்று (26.03.2025) தொடங்கி நாளை (27.03.2025) வரை கல்லடி பால மைதானத்தில் நடாத்திக்கொண்டிருக்கிறது.. இதில், பல்வேறு துறைகளில் செயல்படும் பெண்கள் தங்களது திறமைகளை வெளிப்படுத்தும் வாய்ப்பைப் பெறுகின்றனர்.

இந்த நிகழ்வில், பெண்கள் தாமே சுயமாக தயாரித்த பொருட்களை விற்பனைக்கு ஏற்ற வகையில் வடிவமைத்து, பொதுமக்களுக்கு காட்சிப்படுத்துகின்றனர். இவ்வகையான கண்காட்சிகள் பெண்களுக்கு அதிகளவில் சந்தைப்படுத்தல் வாய்ப்புகளை ஏற்படுத்துகின்றன. மேலும், அவர்களின் தயாரிப்புக்களான கைத்தொழில் பொருட்கள் மற்றும் பாரம்பரிய உற்பத்திப் பொருட்கள், வீட்டில் தயாரிக்கப்பட்ட உணவுப்பொருட்கள் மற்றும் களிமண்ணால் செய்யப்பட்ட ஆபரணங்கள் மற்றும் அலங்கார பொருட்கள் வணிக ரீதியாக விரிவடைய உதவுகின்றன.

இந்த கண்காட்சி பெண்கள் தங்கள் தொழில்முயற்சிகளை விரிவுப்படுத்துவதற்கான ஒரு சிறந்த சந்தைப்படுத்தல் தளமாக அமைந்துள்ளது. இவ்வாறான முயற்சிகள் பெண்களின் பொருளாதார மேம்பாட்டிற்கு உறுதுணையாக இருக்கும்.

மேலதிக தகவல்களுக்கு மாற்றம் செய்திகள்

Diversity Market Exhibition Empowering Women’s Progress

In celebration of International Women’s Day, the Batticaloa District Secretariat, in collaboration with CHRYSALIS, is hosting a special multifaceted trade exhibition under the theme, “She Leads the Way for a Sustainable Future.” This initiative aims to encourage and support women in entrepreneurial ventures, providing them with an opportunity to showcase their skills and products.

The exhibition is being held at Kallady Bridge Grounds and will take place over two days, from March 26 to March 27, 2025. Women from various sectors have come together to display their talents and expertise, creating a vibrant marketplace that fosters economic empowerment.

At this event, women entrepreneurs are presenting and selling their handmade and self-produced goods, carefully crafted to meet market demands. The exhibition provides them with a unique platform to enhance their marketing opportunities, expand their business reach, and connect with a wider audience. Among the showcased items are:

  • Handicrafts and traditional artisanal products
  • Home-made food items
  • Clay-based jewelry and decorative pieces
  • Various handmade household accessories

Such exhibitions play a crucial role in enhancing women’s economic participation by providing them with direct exposure to potential buyers and market networks. This initiative not only supports women’s financial independence but also contributes to the growth of sustainable small-scale industries led by women.

By empowering women entrepreneurs, this trade exhibition fosters innovation, self-sufficiency, and long-term business growth, ultimately leading to a more inclusive and sustainable economy.

For more news visit us Maatram News