வீர சிவாஜி ஒரு முறை முகலாய மன்னனிடம் இருந்து தப்பித்து மாறு வேடத்தில் ஊருக்குள் சுற்றிக் கொண்டிருந்தார் . ரொம்பப் பசி எடுத்ததும் அருகில் இருந்த ஒரு வீட்டிற்குச் சென்று தனக்கு உணவளிக்குமாறு கேட்டுக்கொண்டார்.
அந்த வீட்டிலிருந்த வயதான பாட்டி அப்போது தான் சமைத்து முடித்திருந்தார். “வாப்பா” என்றழைத்து சுட சுட சோற்றைப் பரிமாறினார். அவசரக் குடுக்கையான சிவாஜி பசி தாளாமல் வேகவேகமாய் சுடு சோற்றின் நடுவே கைவைத்துச் சாப்பிட ஆரம்பித்தார். அதிக சூட்டினால் சாப்பிட முடியாமல் தவித்தார்.
உடனே குறுக்கிட்ட பாட்டி “ஏம்ப்பா நீயும் நம்ம சிவாஜி மாதிரி விவரம் புரியாத ஆளா இருக்கியே .. முதல்ல சுற்றி இருக்க சின்ன சின்ன கோட்டைகளை கவர்ந்துவிட்டு அப்பறமா பெரிய கோட்டைய ஆக்கிரமிக்க வேண்டும் எடுத்ததுமே மிகப் பெரிய விஷயத்துக்கு ஆச மட்டும் பட கூடாது. அது போல நீ ஓரத்தில் இருக்கின்ற சோற்றை முதலில் சாப்பிட்டு முடி. அதற்குள் நடுவில் இருக்கும் மலைக்குவியல் சோறு ஆறியிருக்கும். பின் அதை சாப்பிடலாம் ” என்று கூறினார். சிவாஜிக்குத் தூக்கி வாரிப் போட்டது. இருந்தும் பாட்டியின் சொல்லில் இருக்கும் நிஜத்தை புரிந்து கொண்ட சிவாஜி போர் நுணுக்கத்தை தனக்குச் சொல்லிக் கொடுத்த பாட்டியிடம் தான் தான் சிவாஜி என்று சொல்லாமலேயே, உணவளித்தமைக்கு நன்றி சொல்லி அந்த இடத்தை விட்டு வெளியே வந்தார்.
உங்களுக்கான பாடம் மதகுருக்களிடமோ , போதகர்களிடமோ , பேச்சாளர்களிடமோ , பெரிய எழுத்தாளர்களிடமோ மட்டும் இருப்பதில்லை…. நீங்கள் கடந்து செல்லும் பாதையில் எதிரில் வரும் காலில்லாத மனிதனிடம் கூட இருக்கலாம். யாரையும் துச்சமாய் நினைக்காமல் எல்லோரிடமிருந்தும் எதைக் கற்றுக் கொள்ள முடியுமோ அதைக் கற்றுக் கொள்ளுங்கள்.
நல்லதைப் பிறருக்கு செய்யுங்கள். கெட்டதையும் பிறரை செய்ய வேண்டாம் என்று அறிவுறுத்துங்கள் , நீங்களும் பின்பற்றுங்கள் !
மேலதிக தகவல்களுக்கு மாற்றம் செய்திகள்
Learn from Everyone!

Once, the Veerashivaji escaped from the Mughal emperor and was wandering through a village in disguise. Feeling extremely hungry, he approached a house and requested some food.
An elderly grandmother living there had just finished cooking. She warmly called him, “Come, dear,” and served him steaming hot rice. Being extremely hungry and impatient, Shivaji quickly placed his hand in the middle of the hot rice and started eating, only to struggle with the unbearable heat.
Seeing this, the grandmother intervened and said, “Oh dear, you seem as naive as our Veerashivaji! You must first capture the small forts surrounding a kingdom before attempting to seize a large one. One should not aim for big things hastily without preparation. Similarly, eat the rice from the edges first. By the time you finish, the heap in the middle will have cooled down, making it easier to eat.”
Shivaji was taken aback but immediately realized the profound truth in her words. Without revealing his true identity, he thanked the grandmother for the food and left the place, having learned a valuable lesson in warfare strategy from her.
Life Lesson:
Lessons are not limited to religious teachers, preachers, speakers, or great writers. Sometimes, even the most unexpected individuals like a common passerby can teach you something valuable. Never underestimate anyone. Learn from everyone.
Always do good for others. Advise people not to do wrong, and most importantly, follow the same principles yourself!
For more stories visit us Maatram News