Skill Development

திலகவதியார் மகளிர் இல்லத்தில் தொழிற்திறன் மேம்பாட்டு பயிற்சி

விவேகானந்த தொழிநுட்பவியல் கல்லூரியானது பல்வேறுபட்ட செயன்முறைகளினூடாக சமூகத்தில் இளைஞர்களின் பொருளாதார நிலையினை உயர்த்தும் நோக்கில் தனிமனித வலுவூட்டலினூடாக சமூக பொருளாதார மாற்றம் எனும் குறிக்கேளை நோக்கி பல்வேறுபட்ட செயற்பாடுகளை நடைமுறைப்படுத்தி வருகின்றமை குறிப்பிடத்தக்கவிடயமாகும்.

அந்த வகையில் மாதம் ஒரு களம் செயற்றிட்டத்தின் அடிப்படையில் கிராமம்தோறும் சென்று இளைஞர்களுக்கான வலுவூட்டல் செயற்பாடுகள் மூலம் அவர்களது திறன்களை அடையாளப்படுத்துதல் மற்றும் அவர்களுக்கான தொழில்சார் நுட்பங்களை விருத்தி செய்வதன் மூலம் இன்றைய காலகட்டத்தில் அவர்களின் தொழில்சார் திறன்களின் மூலம் தங்களது குறிக்கோளை அடைவதற்கான வழிமுறைகள் பற்றிய விளக்கங்கள் வழங்கப்படுகின்றமை குறிப்பிடதக்க விடயமாகும்.

அந்த வகையில் போரதீவுபற்று பிரதேச செயலக பிரிவுக்குட்பட்ட பழுகாமம் பிரதேசத்தின் திலகவதியார் மகளிர் இல்ல தையல் பயிற்சிநெறி பயிலும் 30 க்கும் மேற்பட்ட பெண்களுக்கான தொழிற்திறன் மேம்பாடு பற்றிய விசேட செயலமர்வானது 28.03.2025 ஆம் திகதி வெள்ளிக்கிழமை சமூக நலன்புரி அமைப்பின் ஒருங்கிணைப்பின் கீழ் கல்லூரியினரால் சிறப்பான முறையில் மேற்கொள்ளப்பட்டது.

இந்நிகழ்வில் பயிலுனர்கள் தமது பயிற்சியின் பின் தமது திறன்களை விருத்தி செய்து சமூகத்தின் மத்தியில் சிறந்ததொரு தொழில்முனைவோராவதற்கு தேவையான பண்புகள், அவர்களது உற்பத்திகளை விரிவுபடுத்தி சிறந்த முறையில் சந்தைப்படுத்துவதற்கான வழிமுறைகள் மற்றும் அதில் எதிர்நோக்க வேண்டிய சவால்கள் அதனை எதிர்கொண்டு வெற்றி எனும் இலக்கை அடைய தேவையான பண்புகள் என்பன பற்றிய முழுவிளக்கங்களை பெற்றுக்கொண்டனர்.

மேலதிக தகவல்களுக்கு மாற்றம் செய்திகள்

Skill Development Training at Thilagavathiyar Women’s Home

Vivekananda College of Technology has been implementing various initiatives aimed at improving the economic status of youth in society through individual empowerment, driving socio-economic change. This effort is particularly noteworthy.

As part of this mission, the college carries out its “Maatham Oru Kalam” (One Field per Month) program, visiting villages to conduct empowerment activities for youth. These initiatives focus on identifying their skills, enhancing vocational techniques, and providing guidance on achieving their goals through professional development in today’s competitive environment.

In this regard, a special skill development session was successfully organized on Friday, March 28, 2025, for over 30 women enrolled in the tailoring training program at Thilagavathiyar Women’s Home in Palugamam, Poratheevupattu Division. The event was coordinated by the college in collaboration with a social welfare organization.

During the session, the trainees received comprehensive guidance on:

  • Essential entrepreneurial qualities to excel in society after completing their training.
  • Methods to expand production and effectively market their products.
  • Challenges they may face and the key traits needed to overcome them and achieve success.

This initiative highlights the college’s commitment to fostering self-reliance and economic growth among rural women through skill-based empowerment.

For more news visit us Maatram News