ஓர் காட்டில் கெட்ட சுபாவமுள்ள தேள் ஒன்று வசித்து வந்தது. அந்தக் காட்டின் நடுவில் ஒரு நீரோடை இருந்தது. அந்தத் தேளுக்கு இக்கரையில் இருந்து அக்கரைக்கு போக வேண்டி இருந்தது.
அக்கரைக்குப் போவதற்காக அந்த நீரோடையில் இருக்கும் பெரிய மீன்கள், நண்டு, தவளை போன்றவைகளிடம் தேள் உதவி கேட்டது, ஆனால் அந்த பொல்லாத தேள் தமக்குக் கொட்டிவிடும் என்று அவை மறுத்து விட்டன.
எப்படி நீரோடையைக் கடப்பது என்று தேள் யோசித்துக்கொண்டு இருந்தபோது அந்த நீரோடையில் ஆமை ஒன்று வந்து கொண்டிருந்தது. ஆமையைக் கண்ட தேள்.
ஆமையாரே! நான் அக்கரைக்குச் செல்லவேண்டும் என்னை அங்கு கொண்டு போய் விட்டு விடுவீரா? என்று கேட்டது.
நானும் அக்கரைக்குத்தான் போகிறேன், என் முதுகில் ஏறிக்கொள்ளும் உம்மை நான் அக்கரையில் விட்டுவிடுகிறேன்! என்றது ஆமை,தேளும் ஆமையின் முதுகில் ஏறிக்கொண்டது
ஆமை நீரில் நீந்திச்செல்ல ஆரம்பித்தது.
சிறிது தூரம் தான் ஆமை சென்றிருக்கும் தேளுக்கு ஒரு யோசனை வந்தது ,நான் பல பேரைக் கொட்டியிருக்கிறேன்.அவர்கள் வலியால் துடித்ததையும் பார்த்திருக்கின்றேன்.ஆனால நான் ஒரு நாளும், ஆமைக்கு கொட்டவில்லை. இந்த ஆமையைக் கொட்டினால் எப்படித் துடிக்கும்? இதை விட்டால் வேறு சந்தர்ப்பம் கிடையாது .என்று ஆமைக்கு கொட்டிப் பார்க்க நினைத்தது.
தேள் ஆமையின் முதுகில் கொட்டியது. ஆனால் ஆமை பேசாமல் போய்க்கொண்டிருந்த்து.
உடனே தேள் ஆமையைப் பார்த்து
ஆமையாரே! உமது முதுகு கடினமாக இருக்கிறதே. உமது உடம்பில் வலியே வருவதில்லையா? என்று கேட்டது.
தேளின் கெட்ட எண்ணத்தைப் புரிந்துகொள்ளாத ஆமை , எனது முதுகு கடினமான ஓட்டினால் மூடப்பட்டுள்ளது அதனால் எனக்கு அந்த இடத்தில் வலியே வருவதில்லை, ஆனால் எனது கழுத்துப்பக்கம் மென்மையாக இருக்கும் . இதில் தான் எனக்கு வலிகள் காயங்கள் ஏற்படும் என்று சொன்னது ஆமை.
ஓகோ அப்படியா? என்று கேட்ட தேள் ,மெதுவாக ஆமையின் கழுத்துப் பகுதியை நோக்கிச் சென்றது . கழுத்தில் இருந்து தலைப்பகுதிக்குச் சென்ற தேள் ஆமைக்கு கொட்ட ஆரம்பித்தது.
தலையில் ஏதோ குத்தியதால் விடுக்கென்று தலையை உள்ளே இழுத்துக் கொண்டது ஆமை . தேள் நீரோடையில் விழுந்து விட்டது.
தனக்கு உதவி செய்த ஆமைக்கு கேடுவிளைவிக்க நினைத்த தேள் தண்ணீரில் மூழ்கி இறந்தது. ஆமை கரையை நோக்கி நீந்திச் சென்றது.
ஒருவர் எவ்வித பலனையும் எதிர்பாராமல் எமக்கு உதவி செய்தாராயின், அவரின் உதவியை நாம், எம் வாழ் நாளில் என்றுமே மறந்துவிடலாகாது. அவருக்கு நன்றியுடையவனாக இருத்தல் வேண்டும்.மாறாக அவருக்கு கேடு செய்ய நினைப்போமாயின், அது எம்மையே வந்து சேரும்.
மேலதிக தகவல்களுக்கு மாற்றம் செய்திகள்
Those Who Plan to Harm Others, Will Be Harmed Themselves!
Once, in a forest, there lived a scorpion with a bad nature. In the middle of the forest, there was a stream. The scorpion wanted to cross the stream and go to the other side.
It asked big fish, crabs, and frogs in the stream for help, but they all refused. They were scared the scorpion would sting them.
While thinking about how to cross the stream, the scorpion saw a tortoise.
The scorpion asked,
“Tortoise, can you help me cross the stream?”
The tortoise replied,
“I’m also going that way. Climb on my back, and I’ll take you there.”

The scorpion climbed on the tortoise’s back, and the tortoise started swimming.
After going a short distance, the scorpion had a thought:
“I have stung many creatures before. I’ve seen how they suffer. But I’ve never stung a tortoise. I wonder how it will react. This may be my only chance.”
So, it stung the tortoise’s back. But the tortoise didn’t react and kept swimming.
Surprised, the scorpion asked,
“Doesn’t it hurt? Your back is so hard!”
The tortoise replied,
“My back is covered with a hard shell, so I don’t feel pain there. But my neck is soft—that’s where I feel pain.”
The scorpion then slowly moved toward the tortoise’s neck and stung its head.
Feeling the pain, the tortoise quickly pulled its head into its shell. The scorpion lost balance and fell into the water.
The scorpion, who tried to hurt the tortoise that helped him, drowned in the stream. The tortoise safely reached the other side.
Moral of the story:
If someone helps you without expecting anything in return, never forget their kindness. Always be thankful. If you try to harm them instead, that harm will come back to you.
For more interesting stories visit us Maatram News