அதிவிரைவாக கணக்குகளை சரி செய்வதன் மூலம் சோழன் உலக சாதனை படைத்த மட்டக்களப்பு சிறுமி

அதிவிரைவாக கணக்குகளை சரி செய்வதன் மூலம் சோழன் உலக சாதனை படைத்த மட்டக்களப்பு சிறுமி

பொறியியளாளர் சுப்ரமணியம் மற்றும் மருத்துவர் ஹிசாந்தினி ஆகியோரின் மகள் ஐந்து வயதும் பதினொரு மாதங்களுமான பள்ளி மாணவி செல்வி.காவியஸ்ரீ சுப்பிரமணியம், இவர் மூன்று, நான்கு, ஐந்து மற்றும் ஆறு வரிசைகளைக் கொண்ட 200 கூட்டல் மற்றும் கழித்தல் கணக்குகளுக்கு 6 நிமிடம் 51 செக்கனில் விடையளித்து சோழன் உலக சாதனை படைத்தார்.

இதற்கான நிகழ்வானது நேற்று 08.09.2024 ஞாயிற்றுக்கிழமை பி.ப 3.30 மணிக்கு மட்டக்களப்பு கல்லடியில் அமைந்துள்ள கிரீன் கார்டன் ஹோட்டலில் சோழன் உலக சாதனைப் புத்தக நிறுவனத்தின் நடுவர்கள் முன்னிலையில் நடாத்தப்பட்டது.

இதன் போது தனக்கு வழங்கப்பட்டிருந்த 200 கூட்டல் மற்றும் கழித்தல் கணக்குகளுக்கான சரியான பதிலை 7 நிமிடங்களுக்குள் எழுதி சோழன் உலக சாதனையை நிலை நாட்டியுள்ளார்.

இந்த நிகழ்வை சோழன் உலக சாதனைப் புத்தக நிறுவனம், பீபல்ஸ் ஹெல்பிங் பீபல்ஸ் பவுண்டேஷன் மற்றும் கதிரவன் சமூக அபிவிருத்தி நிறுவனம் போன்ற அமைப்புகள் இணைந்து நடத்தின.

சோழன் உலக சாதனை படைத்த சிறுமிக்கு சட்டகம் செய்யப்பட்ட சான்றிதழ், பதக்கம், நினைவுக் கேடயம், அடையாள அட்டை போன்றவைகளை சோழன் உலக சாதனைப் புத்தக நிறுவனத்தின் துணைத் தலைவர் ஸ்ரீ நாகவாணி ராஜா, மட்டக்களப்பு மாவட்டத் தலைவர் கதிரவன் த.இன்பராசா மற்றும் மட்டக்களப்பு மாவட்ட துணைத்தலைவர் சிவ வரதகரன் போன்றோர் வழங்கிப் பாராட்டினார்கள்.

இந்த வரலாற்றுச் சிறப்புமிக்க உலக சாதனை நிகழ்வின் முதன்மை விருந்தினராக மன்முனை வடக்கு பிரதேச செயலாளர் திரு.வ.வாசுதேவன் அவர்கள் பங்குபற்றியதோடு நிகழ்வைத் தலைமேயேற்று கதிரவன் த.இன்பராசா அவர்கள் நடத்தினார்.

சிறப்பு விருந்தினர்களாக திரு R.J.பிரபாகரன் கோட்டக் கல்விப் பணிப்பாளர் மண்முனை வடக்கு, திருமதி சித்ரா இளமநாதன் பணிப்பாளர் UCMAS – இலங்கை, திரு சி.சதீஸ்குமார் UCMAS – மட்டக்களப்பு ஆகியோரும்

கௌரவ விருந்தினர்களாக கவிஞர் அ.அன்பழகன்குரூஸ் ஆலோசகர் கதிரவன் பட்டிமன்றப் பேரவை, திரு ச.ஜெயராஜா தலைவர் உதவும் கரங்கள், கலாநிதி V.R.மகேந்திரன் தலைவர் அகிலன் பவுண்டேசன், திருமதி. பேரின்பம் பார்வதி (சோழன் உலக சாதனை புத்தக நிறுவனத்தின் கனேடிய நாட்டிற்கான தலைவரின் தாயார்) திரு ஜேசுதாசன் மோசஸ் PHPF – மட்டக்களப்பு ஆகியோரும் பங்குபற்றினர்.

அத்தோடு மட்டக்களப்பு மாநகர முன்னாள் முதல்வர், கதிரவன் ஆலோசகர் அதிபர் திரு. அ.குலேந்திரராஜா, உலக நண்பர்கள் அமைப்பின் பணிப்பாளர் திரு ஏ.கங்கா தரன், வேல் முருகன் சகோதரர்கள், மற்றும் சமூக ஆர்வலர்கள், கல்வியலாளர்கள் என பலரும் கலந்து கொண்டனர்.

வரவேற்புரையுனை சோலையூரான் ஆ.தனுஸ்கரன் உபதலைவர் – கதிரவன் அவர்களும், நன்றியுரைனை சர்மிளா சுப்பிரமணியம் அவர்களும், நிகழ்ச்சித் தொகுப்பினை கவிஞர் அழகு தனு செயலாளர் – கதிரவன் அவர்களும் நிகழ்த்தினர்.

மட்டக்களப்பு மாவட்டத்தின் பெருமையை உலக வரலாற்றில் பதிவு செய்த சாதனைக் குழந்தையை ஊக்கப்படுத்தி அனைவரும் பரிசில்கள் வழங்கி வைத்தமை குறிப்பிடத்தக்கது.

Comments

No comments yet. Why don’t you start the discussion?

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *