கற்றல் மேம்பாட்டு திட்டம் குறித்து நடைபெற்ற சிறப்பு கலந்துரையாடல்

கற்றல் மேம்பாட்டு திட்டம் குறித்து நடைபெற்ற சிறப்பு கலந்துரையாடல்

முல்லைத்தீவு புதுக்குடியிருப்பு அன்னை ஸ்ரீ சாரதா நிலையத்திற்கு 06.06.2025 திகதி மு.ப 11.00 மணிக்கு இலண்டன் ஈலிங் ஸ்ரீ கனக துர்க்கை அம்மன் ஆலயத்தின் பொருளாளர் திரு.பாலசுப்பிரமணியம் ஐயா அவர்கள் வருகை தந்தார்கள்.

அவருடனான கலந்துரையாடலின் போது அன்னை ஸ்ரீ சாரதா நிலையம் 2019ல் ஆரம்பிக்கப்பட்டதிலிருந்து இன்று வரையான செயற்பாடுகளுக்கான விளக்கங்கள் முகாமையாளர் அவர்களினால் வழங்கப்பட்டதுடன் அது தொடர்பான கோப்புக்களும் காண்பிக்கப்பட்டது. இந் நிலையத்தின் தலைவர் அவர்களும் இந்நிகழ்வில் கலந்து கொண்டார்கள்.

அன்னை ஸ்ரீ சாரதா நிலையத்தின் நிரந்தர காணியினுள் கட்டப்படவிருக்கும் கற்றல் மேம்பாட்டு நிலையம் கட்டுவதற்கான நிதி உதவி தொடர்பான விடயங்கள் கலந்துரையாடப்பட்டது. திரு. பாலசுப்ரமணியம் ஐயா அவர்கள் லண்டன் சென்று தங்களது நிர்வாக அமைப்பினருடன் கட்டிடத்திற்கான நிதி தேவைப்பாடு பற்றி கலந்துரையாடுவதாகவும் அத்துடன் ஈலிங் ஸ்ரீ கனக துர்க்கை அம்மன் ஆலய தலைவர், பொருளாளர் அவர்களுக்கு கட்டிடம் கட்டுவதற்கு 45 லட்சம் ரூபாய் நிதியுதவி கோரி திட்டமுன்மொழிவினை சமர்ப்பிக்கும் படியும் கூறினர்.

பல்கலைக்கழகம் செல்ல தெரிவாகும் பிள்ளைகளுக்கான நிதி உதவி செய்வது பற்றிய கலந்துரையாடலும் இடம்பெற்றது. நிலைய மாணவிகளுடன் மதிய போசன உணவு பரிமாறப்பட்டதுடன், நிலைய செயற்பாடுகளை பாராட்டியதோடு நிலையத்திலிருந்து விடை பெற்றார் என நிலைய முகாமையாளர் தெரிவித்தார்.

மேலதிக தகவல்களுக்கு மாற்றம் செய்திகள்


Special Discussion Held on the Learning Development Project

On 06.06.2025 at 11:00 AM, Mr. Balasubramaniam, Treasurer of the Ealing Sri Kanaka Durkkai Amman Temple in London, visited the Annai Sri Saratha Centre in Puthukudiyiruppu, Mullaitivu.

During his visit, the manager of the Annai Sri Saratha Centre provided an overview of the Centre’s activities since its inception in 2019, along with the relevant documentation. The President of the Centre also participated in this event.

Discussions were held regarding financial assistance for the construction of a Learning Development Centre to be built within the permanent premises of the Annai Sri Saratha Centre. Mr. Balasubramaniyam stated that upon returning to London, he would discuss the funding requirements for the building with his administrative team. He also mentioned that he would submit a project proposal requesting a financial contribution of 4.5 million rupees (LKR 45 lakhs) from the Chairman and Treasurer of the Ealing Sri Kanaka Durkkai Amman Temple for this construction.

There was also a discussion about providing financial assistance to students selected to enter universities.

A lunch meal was served to the female students of the Centre. Mr. Balasubramaniyam expressed his appreciation for the activities carried out by the Centre and took his leave, according to the Centre’s manager.

For more news Maatram News