விவேகானந்த பூங்காவானது மனதை நல்வழிப்படுத்தும் நல்ல சிந்தனைகளையும், மன மகிழ்வையும் இளைய சமுதாயத்திற்கு வழங்கி அவர்களின் வாழ்க்கை மேம்பட உதவுவதுடன், எமது மாவட்டத்தின் ஆன்மீக கலாச்சாரத்தினை பிரதிபலிக்கும் இயற்கையுடன் கூடிய ஒரு சுற்றுலா மையமாகவும் அமையவுள்ளது.



இப் பூங்காவானது தற்போது ஜக்கிய இராச்சியத்தில் வசிக்கும் மட்டக்களப்பு திருப்பழுகாமத்தினைச் சேர்ந்த மட்/சிவானந்த வித்தியாலயத்தின் பழைய மாணவர் திரு.க.சற்குணேஸ்வரன் அவர்களின் முயற்ச்சியினால் ஸ்தாபிக்கப்பட்டு, அவர் 1996ஆம் ஆண்டு ஸ்தாபித்த சமூக நலன்புரி அமைப்பினால் நடைமுறைப்படுத்தப்பட்டு வருகின்றது.
மிகவும் அழகு நிறைந்த பூங்காவுடனும், சுவாமி விவேகானந்தரின் 30 அடி உயரமான திருவுருவச் சிலையுடனும் 3½ ஏக்கர் பரப்பான காணியில் நிர்மாணிக்கப்பட்டுள்ள இப் பூங்காவானது கடந்த 2024.08.25ஆம் திகதி ராமகிருஷ்ண மிஷன் சுவாமிஜிக்களிளால் வைபவரீதியாக திறந்துவைக்கப்பட்டுள்ளது.
முதன்மைக் அம்சங்கள்
- சுவாமி விவேகானந்தர் 30 அடி உயர சிலை
- மனதை ஒருநிலைப் படுத்தக்கூடிய இயற்கை சூழல்
- விவேகானந்த உரைகள் (Quotes) – இங்கே சுவாமி விவேகானந்தரின் 450 மேற்பட்ட பொன்மொழிகளில் சில காட்சியளிக்கப்படுகின்றன.
- ஆடியோ/வீடியோ தொகுப்புகள் – தியானம், பக்தி பாடல்கள் மற்றும் விவேகானந்த சுவாமியின் தொலைக்காட்சி/ஆடியோ தொகுப்புகள் பெறக்கூடியதாக இருக்கிறது.
- மனதை ஈர்க்கும் பூமரங்கல் காணப்படுகின்றன.
மேலதிக தகவல்களுக்கு மாற்றம் செய்திகள்
Vivekananda Park, Batticaloa
The Vivekananda Park is envisioned as a serene and inspiring space that imparts positive thoughts and mental well-being to the younger generation. It aims to support their personal development while also serving as a nature-infused spiritual and cultural tourism center reflecting the heritage of our district.
This park has been established through the dedicated efforts of Mr. K. Sarkuneswaran, a former student of BT/Sivananda Vidyalayam from Thiruppazham village in Batticaloa, who is currently residing in the United Kingdom. It has been implemented through the social welfare organization he founded in 1996.
Built on a 3½-acre land, this beautiful park features a 30-foot-tall statue of Swami Vivekananda and was ceremonially inaugurated by the monks of the Ramakrishna Mission on August 25, 2024.
Key Features
- 30-feet-tall Statue of Swami Vivekananda
- A serene natural environment that helps calm and focus the mind
- Vivekananda Quotes – A selection of over 450 inspiring quotes by Swami Vivekananda are displayed here
- Audio/Video Collections – Includes guided meditations, devotional songs, and Swami Vivekananda’s discourses available in video and audio formats
- Beautiful flowering gardens that enhance the park’s visual appeal and atmosphere
more details maatramnews.com