அமிர்தா நிறுவனத்தினால் ஏற்பாடு செய்யப்பட்ட மட்டக்களப்பில் உள்ள சிறுதொழில் முயற்சியாளர்களின் ஒன்றுகூடல் இன்று 07.07.2025 அமிர்தா நிறுவன அலுவலகத்தில் நடைபெற்றது. இந் நிகழ்வானது அமிர்தா நிறுவனத்தின் பிரதம நிறைவேற்று அதிகாரி திரு.த.புவிகரன் அவர்களின் தலைமையில் இடம்பெற்றது. இதில் பல சிறுதொழில் முயற்சியாளர்கள் கலந்துகொண்டனர்.
இந் நிகழ்வின் போது, சிறுதொழில் முயற்சி யாளர்கள் எதிர் கொள்ளும் சவால்கள் மற்றும் பிரச்சனைகள் கேட்றடியப்பட்டு அதற்குரிய தீர்வுகள் அமிர்தா நிறுவனத்தினால் வழங்கப்பட்டது. நிதிமுகாமைத்துவம் மற்றும் தங்களது உற்பத்தி பொருட்களை அடுத்த கட்டத்திற்கு கொண்டு செல்வதற்கான சந்தைப்படுத்தல் பற்றிய விளக்கங்களும், குழுக்களாக ஒன்றிணைந்து செயற்படுவதனால் கிடைக்கும் நன்மைகளும், தற்கால சூழலுக்கு ஏற்றவாறு தங்களை தயார்படுத்தல் மற்றும் தர நிர்ணயத்தை உறுதிப்படுத்தி கொள்ளல் சம்பந்தமான விடயங்களும் கலந்துரையாடப்பட்டன.



அத்துடன் தாங்கள் எதிர்நோக்கும் சவால்கள் மற்றும் பிரச்சனைகள் தங்களால் நிவர்த்தி செய்யப்படாதவிடத்து தங்களுடைய தேவையை அமிர்தா நிறுவனத்திடம் கேட்டுக்கொண்டால் அத்துறை சார்ந்த வளவாளர்கள் (Resource Hub ) மூலம் தகுந்த தீர்வுகள் வழங்கப்படும் என்பதும் தெரியப்படுத்தப்பட்டது.
மேலதிக தகவல்களுக்கு மாற்றம் செய்திகள்
Meeting of small scale entrepreneurs in Batticaloa
A gathering of small-scale entrepreneurs in Batticaloa, organized by Amirda Private Limited, was held today (07.07.2025) at the Amirda Private ltd. The event was conducted under the leadership of Mr. T. Puvikarana, the Chief Executive Officer of Amirda.
Many small-scale entrepreneurs participated in this event. During the session, the challenges and issues faced by the entrepreneurs were discussed, and appropriate solutions were provided by the Amirda team. Topics such as financial management, marketing strategies to elevate their products to the next level, the benefits of working collaboratively as groups, adapting to the current market environment, and ensuring product quality standards were also addressed.



Furthermore, it was emphasized that if the entrepreneurs are unable to resolve certain challenges on their own, they can request support from Amirda. In such cases, relevant solutions will be offered through the company’s Resource Hub.
For more news Maatram News