தன்னம்பிக்கை

தன்னம்பிக்கை

தன்னம்பிக்கை

எப்போதுமே பரபரப்பாக இருக்கும் நகரத்திற்கு அமைதியான இயற்கை அழகுடன் கூடிய கிராமத்தில் வசிக்கும் வனிதா பூக்கள் விற்பதற்காக வருவார்.

வனிதா பார்ப்பதற்கு மிகவும் அமைதியான தோற்றமும் தோற்றத்திற்கு ஏற்றாற்போல் குணமும் உடையவள்.

வழமை போல் அன்று தன்னுடைய பூக்களை விற்பனை செய்வதற்காக வனிதா வந்தாள். திடீரென எதிர்பாராத விதமாக வானம் இருண்டு மழை சோவென்று கொட்டத்தொடங்கிற்று. வனிதாவுக்கோ சொந்தமான கடை இல்லை பூக்களை தலையில் சுமந்து கொண்டு தெருவில் கூவி தான் விற்பாள் . அன்று பெய்த மழையில் வனிதாவின் பூக்கூடையில் இருந்த பூக்கள் எல்லாம் சேதமடைந்தது.

வனிதாவின் கண்கள் கலங்கத்தொடங்கிற்று. அப்படியே கீழே தலையில் கை வைத்தபடி இருந்துவிட்டாள். என்ன செய்வது என்று தெரியவில்லை. மக்களோ இதை எல்லாம் கவனிக்கமல் கட்டிடங்களை நோக்கி ஓடக்கொண்டிருந்தனர்.

அழுது கொண்டிருந்த வனிதா திடீரென சிரித்தார். எழுந்து மறுபடியும் கூவத்தொடங்கினார் இன்று அனைவருக்கும் மலர்கள் இலவசம் என்று கூவினாள்.

கைகளில் பூக்களை எடுத்துக்கொண்டு அனைவருக்கும் இலவசமாக தந்தாள் . அப்போது சிலர் வியப்புடன் பூக்களை பெற்றுச்சென்றனர். சிலர் சிரித்துக்கொண்டே வாங்கிக்கொண்டு நன்றிகூறிச்சென்றனர்.

அப்போது இந்த மழையை கூட பொறுட்படுத்தமல் ஒருவர் தொலைபேசியில் சத்தமாக சண்டையிட்டுக்கொண்டு வந்தார். அவர் வனிதாவுக்கு அருகில் வரும் போது வனிதா பூக்களை நீட்டி இன்று பூக்கள் இலவசம் என்று அந்த நபருக்கு வழங்கினாள். திடீரென அந்த நபர் வனிதாவை திட்ட தொடங்கினார். பொறுமையாக அதனை கேட்டு முடித்த வனிதா நீங்கள் மோசமானவர் அல்ல ஆனால் இன்று இடம்பெற்ற ஏதோ ஒரு சம்பவத்தால் பாதிக்கப்பட்டுள்ளீர்கள் என்று சிரித்துக்கொண்டே கூறினார்.

அந்த மனிதருக்கோ வேறு எதுவும் பேச தோன்றவில்லை. எதுவுமே பேசாமல் அந்த இடத்தை விட்டு நகர்ந்து சென்றுவிட்டார். இப்படியே 5 நாட்கள் மழை பெய்தது. வனிதாவும் மக்களுக்கு பூக்களை இலவசமாக வழங்கிகொண்டிருந்தாள்.

5 நாட்கள் கழித்து வானம் இயல்பு நிலைக்கு திரும்பியது. மக்கள் மீண்டும் பரபரப்பாக ஓடத்தொடங்கினர். வனிதாவும் தன் வேலையை மீண்டு ஆரம்பித்தாள். அப்போது திடீரென அழகான வெள்ளை சேர் அணிந்து அமைதியான தோற்றத்துடன் சிறு புன்னகையுடனும் ஒருவர் வந்து வனிதாவிடம் பேசத்தொடங்கினார்.

வணக்கம் என்னுடைய பெயர் கார்த்திக். நான் உங்களை இரண்டாவது முறையாக சந்திக்கின்றேன் என்று கூற வனிதாவுக்கு அவரை அடையாளம் தெரியவில்லை . தொடர்ந்து பேச தொடங்கிய கார்த்திக் “நான் சில தினங்களுக்கு முன்பு என்னுடைய வியாபாரம் தோல்வியடைந்து நஷ்டமடைந்தேன். என்னுடைய தந்தை வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டிருந்தார். என்ன செய்வது என்று புரியவில்லை. அலுவலகத்தில் ஒரு நாளில் செய்து முடிக்கவேண்டிய வேலை இருந்தது. அதை ஒரே நாளில் கொடுத்தால் தான் என்னுடைய கடனை அடைக்கக்கூடிய பணம் கிடைக்கும்.

என்ன செய்வது என்று புரியவில்லை எனக்கு தெரிந்தவர்களும் கை விட்டு விட்டார்கள். அந்த விரக்தியில் தற்கொலை செய்துவிடலாம் என்று நினைத்துச்செல்லும் போது தான் என் மனைவி அழைப்பெடுத்து எங்கே இருக்கிறீர்கள் என்றாள். அவளுடன் சண்டையிட்டுக்கொண்டிருக்கும் போது தான் உங்களை சந்தித்தேன். நீங்கள் தந்த மலரை கூட பெறவில்லை. கடுமையாக நான் நடந்துகொண்டபோதிலும் நீங்கள் சாந்தமாக பதில் வழங்கினீர். மழை வந்து உங்கள் வியாபாரத்தை நஷ்டமடைய செய்த போதும் உங்களிடமிருந்த தன்னம்பிக்கை எனக்கும் நம்பிக்கையளித்தது.

நான் அலுவலகம் செய்று எனது வியாபாரத்தில் நான் விட்ட தவறை கண்டுபிடித்தேன். ஒரே நாளில் செய்ய வேண்டியிருந்த வேலையை தனியாக நானே முடித்தேன். வைத்தியசாலைக்கு சென்றேன். அப்பாவுக்கு நம்பிக்கையளிக்கும் வகையில் பேசினேன். இரண்டு நாட்களில் என்னுடைய தந்தை குணமடைந்தார். வியாபாரத்தை மீண்டும் தொடங்க தேவையான பணம் கைக்கு வந்தது. இப்போது எல்லாமே சரியாகி விட்டது. இவை அனைத்துமே உங்களால் தான் நிகழ்ந்தது”. என்றுகூறி புன்னகைத்தார்.

ஒரு கடதாசியை நீட்டி இது உங்களுக்காக தான். இது கடை ஒன்றுக்கான பத்திரம் என்னால் உங்களுக்கு முடிந்த உதவி என்றார். இனி நீங்கள் பூக்களை எடுத்து வியாபாரநிலையங்களுக்கு மொத்தமாக விற்பனை செய்யலாம் என்றார் கார்த்திக்.

வனிதாவுக்கு அதிர்ச்சியுடன் கூடிய மகிழ்ச்சி. வனிதா கூறினாள் “ஆனால் இந்த கடைக்கான வாடகை தருவதற்கு என்னிடம் பணம் இல்லையே என்று” சிரித்துக்கொண்டே கார்த்திக் சொன்னான் நீங்கள் வியாபாரத்தை ஆரம்பியுங்கள் இலாபம் வர ஆரம்பித்ததும் மொத்தமாக வாடகையை தாருங்கள் என்றான்.

மேலதிக செய்திகளுக்கு மாற்றம் செய்திகள்

Self-confidence

In a village filled with natural beauty and tranquility, far from the hustle and bustle of the city, Vanitha would come to sell flowers.

Vanitha was a woman of calm appearance, and her personality matched her serene looks.

As usual, she came that day to sell her flowers. Suddenly, without warning, the sky darkened and it began to rain heavily. Vanitha didn’t own a shop; she sold flowers by shouting and walking the streets with a basket on her head. Due to the unexpected rain, all the flowers in her basket got spoiled.

Tears welled up in Vanitha’s eyes. She sat down with her head in her hands, unsure of what to do next. People around her ran toward buildings for shelter, not noticing her plight.

But suddenly, Vanitha smiled. She stood up and began shouting again, “Today, flowers are free for everyone!” She picked up the flowers in her hands and gave them away for free. Some people accepted them with surprise, some smiled and thanked her as they took them.

At that moment, a man walked by shouting on his phone, seemingly furious and not caring about the rain. When he came near Vanitha, she offered him flowers and said, “Today the flowers are free.” The man began scolding her harshly. Vanitha patiently listened and, smiling, said, “You are not a bad person. You are just affected by something that happened today.”

The man had nothing to say. He quietly walked away.

It rained for five consecutive days. Vanitha continued giving away flowers to the public for free.

After five days, the sky cleared, and life returned to normal. People resumed their hurried routines, and Vanitha went back to selling flowers again.

Suddenly, a man wearing a neat white shirt with a calm demeanor and a gentle smile approached her and began speaking.

“Hello, my name is Karthik. This is the second time I’m meeting you,” he said.

But Vanitha did not recognize him.

He continued, “A few days ago, I lost my business, and my father was admitted to the hospital. I was completely lost. I had urgent work to finish in one day to get the money I needed to pay off debts. All my contacts abandoned me, and I was on the verge of taking my own life.

At that moment, my wife called and asked where I was. While arguing with her on the phone, I met you. I didn’t even take the flower you offered, and despite my rude behavior, you calmly responded to me. Even though the rain ruined your flower business, your confidence gave me hope.

That night, I went back to the office, found the mistake in my business plan, and completed all the work myself. I visited my father and gave him hope. In two days, he recovered. I also received the funds I needed to restart my business. Everything turned around — and it was all because of you.”

He smiled and handed her a piece of paper.

“This is for you — the ownership deed for a shop. It’s the least I can do to thank you. Now, you can sell flowers in bulk to local businesses.”

Vanitha was overwhelmed with shock and joy. She said, “But I don’t have the money to pay rent for this shop.”

Karthik smiled and replied, “Start your business. Once you start making a profit, you can pay me all the rent together.”