ஏழு மாதங்களில் 198 யானைகள் உயிரிழப்பு
ஏழு மாதங்களில் 198 யானைகள் உயிரிழப்பு

ஏழு மாதங்களில் 198 யானைகள் உயிரிழப்பு

ஏழு மாதங்களில் 198 யானைகள் உயிரிழப்பு

கடந்த 7 மாதங்களில் துப்பாக்கிச் சூடு, ரயில் மற்றும் வாகன மோதல், வேட்டையாடுதல் மற்றும் இயற்கை காரணங்கள் உட்பட பல்வேறு காரணங்களால் 198 காட்டு யானைகள் உயிரிழந்துள்ளதாக சுற்றுச்சூழல் பிரதி அமைச்சர் அன்டன் ஜெயக்கொடி தெரிவித்துள்ளார்.

கடந்த வெள்ளிக்கிழமை மாத்திரம் நான்கு யானைகள் உயிரிழந்துள்ளதாகவும் அவற்றில் இரண்டு யானைகள் ரயிலில் மோதி உயிரிழந்ததுடன் ஏனைய இரண்டு யானைகள் துப்பாக்கிச்சூட்டுக்கு இலக்காகி உயிரிழந்ததாகவும் தெரிவித்துள்ளார்.

மேலும், காயமடைந்த 13 காட்டு யானைகள் வனவிலங்கு அதிகாரிகளிடம் சிகிச்சை பெற்று வருகின்ற நிலையில், துப்பாக்கிச் சூடு தொடர்பான விசாரணைகள் குற்றப் புலனாய்வுத் திணைக்களத்திடம் ஒப்படைக்கப்பட்டுள்ளதாக பிரதி அமைச்சர் மேலும் தெரிவித்துள்ளார்.

மேலதிக தகவல்களுக்கு மாற்றம் செய்திகள்

198 elephants die in seven months

Deputy Minister of Environment Anton Jayakody has said that 198 wild elephants have died in the last 7 months due to various reasons including shooting, train and vehicle collisions, poaching and natural causes.

He said that four elephants had died last Friday alone, two of them were hit by a train and the other two were shot.

Furthermore, while 13 injured wild elephants are receiving treatment from wildlife officials, the Deputy Minister further stated that investigations into the shooting have been handed over to the Criminal Investigation Department.