மாதம் ஒரு களம் – 07

மாதம் ஒரு களம் – 07

மாதம் ஒரு களம் – 07

கனடாவைச் சேர்ந்த திரு.கோபால் பகீரதன் அவர்களின் அனுசரணையுடன் இளைஞர்களின் மாற்றத்திற்கான வலுவூட்டல் என்னும் தொனிப்பொருளில் “மாதம் ஒரு களம்” எனும் செயற்பாடானது விவேகானந்த தொழில்நுட்பவியல் கல்லூரியால் மாதாந்தம் நடைமுறைப்படுத்தப்படுகின்றது.

அதனடிப்படையில், யூலை மாதத்திற்கான நிகழ்வு கல்முனை பிரதேசத்தில் மாதர் அபிவிருத்தி சங்கத்தில் மாதர் அபிவிருத்தி உத்தியோகத்தரின் ஒழுங்கமைப்பின் கீழ் விவேகானந்த தொழில்நுட்பவியல் கல்லூரியின் வளவாளர்களால் மேற்கொள்ளப்பட்டது.

இலக்குகளை நிர்ணயித்தல் என்னும் தொனிப்பொருளில் நடாத்தப்பட்ட இந்நிகழ்வில் வாழ்வில் இலக்குகளின் முக்கியத்துவம் பற்றிய தெளிவூட்டல் வழங்கப்பட்டதோடு, இலக்குகளை தீர்மானிப்பதற்கான செயன்முறைகள் மற்றும் இலக்குகளை அடைவதற்கான படிமுறைகள் உள்ளடங்கலாக பல்வேறு செயற்பாடுகளூடாக தெளிவூட்டப்பட்டது.

குறித்த செயற்பாட்டினை முன்னெடுப்பதன் மூலம் இளைஞர் யுவதிகளுக்கான மனநிலை மாற்றத்தினை ஏற்படுத்துவதோடு மட்டுமன்றி அவர்களின் வாழ்க்கையில் மாற்றத்தினை ஏற்படுத்துவதாகவும் அமையும்.

மேலதிக தகவல்களுக்கு மாற்றம் செய்திகள்

புகைப்படங்களை பார்வையிட மாற்றம் செய்திகள் முகநூல் பக்கத்தை பார்வையிடவும்

One field per month – 07

Under the auspices of Mr. Gopal Bagirathan from Canada, the monthly activity “Month is a Field” is implemented by Vivekananda College of Technology under the theme of Empowering Youth for Change.

Accordingly, the event for the month of July was organized by the resource persons of Vivekananda College of Technology under the organization of the Mother Development Officer at the Mother Development Association in Kalmunai area.

Under the theme of Goal Setting, the event was held to clarify the importance of goals in life and the process of setting goals and the steps to achieve goals were explained through various activities.

By implementing the said activity, not only will it bring about a change in the mindset of the youth but also bring about a change in their lives.