புதிய ரீல்ஸ் அனுபவத்திற்கு தயார் ஆகுங்கள்: இனி ஸ்க்ரோல் செய்யவே தேவையில்லை!
மெட்டா என்பது பேஸ்புக், இன்ஸ்டாகிராம், வாட்ஸ்அப் போன்ற சமூக வலைதளங்களை இயக்கும் பெற்றோர் நிறுவனம். 2021ல் பேஸ்புக் நிறுவனம் “Meta” என பெயர் மாற்றம் செய்து, மெட்டாவெர்ஸ், ஏஐ மற்றும் டிஜிட்டல் கண்டென்ட் மேம்பாட்டில் கவனம் செலுத்தி வருகிறது. அதன் தலைமையகம் அமெரிக்காவின் காலிஃபோர்னியாவில் உள்ளது.
மெட்டா நிறுவனத்தின் ஓர் முக்கியமான சமூக வலைதளமாக திகழ்கிறது Instagram. 2010ஆம் ஆண்டு தொடங்கப்பட்ட இந்த செயலி, இன்று உலகளவில் மாதந்தோறும் 1 பில்லியனுக்கும் அதிகமான பயனர்களால் பயன்படுத்தப்படுகிறது. சிறிய வீடியோக்கள் பகிர்வு, ஸ்டோரி, டைரக்ட் மெசேஜிங் போன்ற பல்வேறு அம்சங்களை கொண்டு இது அனைத்து வயதினரிடமும் பிரபலமாகியுள்ளது.
பயனர்களின் பயன்பாட்டு அனுபவத்தை மேம்படுத்த, இன்ஸ்டாகிராம் தனது பிளாட்ஃபார்மில் அடிக்கடி புதிய அம்சங்களை அறிமுகப்படுத்தி வருகிறது. அந்த வகையில் தற்போது அறிமுகமாக இருப்பது தான் “Auto Reels” எனும் வசதி.
பொதுவாக Reels பகுதியை பயன்படுத்தும் போது, ஒரு வீடியோ முடிந்தவுடன் அடுத்ததை பார்க்க பயனர்கள் கையால் ஸ்வைப் செய்ய வேண்டிய நிலை இருக்கிறது. ஆனால், இப்போது இந்த புதிய Auto Reels feature மூலம், இந்த செயலியை இன்னும் எளிமையாகப் பயன்படுத்த முடியும்.
பயனர்கள், Reels பகுதியில் சென்று “Auto Reels” என்பதை ஆன் செய்தால், அடுத்தடுத்த வீடியோக்கள் தானாகவே தொடர்ச்சியாக இயங்கும். இது YouTube autoplay போல செயல்படும்.
இந்த அம்சம், குறிப்பாக சீராக Reels வீடியோக்கள் பார்க்க விரும்பும் பயனர்களுக்காக உருவாக்கப்பட்டுள்ளது. கை கொண்டு ஸ்வைப் செய்ய வேண்டிய தேவை இல்லாததால், தொடர்ந்து சுவரஸ்யமான வீடியோக்களை பார்க்க முடிகிறது.

🧪 தற்போது பீட்டா பரிசோதனையில்…
இந்த Auto Reels வசதி தற்போது சில பீட்டா பயனர்களுக்கு மட்டுமே அறிமுகப்படுத்தப்பட்டுள்ளது. மெட்டா நிறுவனம் இதை சோதனை அடிப்படையில் வெளியிட்டு, பயனர்கள் எப்படி பயன்படுத்துகிறார்கள் என்பதன் அடிப்படையில் முழுமையான ரிலீஸ் செய்ய திட்டமிட்டுள்ளது.
தற்போது, இந்த அம்சம் iPhone பயனர்களுக்கு மட்டுமே கிடைக்கிறது. ஆனால், எதிர்வரும் வாரங்களில் Android பயனர்களுக்கும் இது வழங்கப்படும் என தகவல்கள் வெளியாகி வருகின்றன.
Instagram Auto Reels என்பது, உங்களது Reels அனுபவத்தை மேம்படுத்தும் ஒரு சுலபமான மாற்றம். விரைவில் அனைத்து பயனர்களுக்கும் இந்த வசதி கிடைக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.
இது போன்ற புதிய சமூக வலைதள அப்டேட்ஸ் மற்றும் டெக் செய்திகள் தமிழில்இ உங்கள் நண்பர்களுடன் பகிரவும், மேலும் அப்படிப்பட்ட தகவல்களுக்காக மாற்றம் செய்திகளை பின்தொடரவும்!
மேலதிக தகவல்களை பெற மாற்றம் செய்திகள் முகநூல் பக்கத்தை பார்வையிடவும்
வேலைவாய்ப்புக்கள் தொடர்பான தகவல்களுக்கு 👇👇👇👇👇
Lucenxia Healthcare (Pvt) Ltd
Position: Clinical Nurses
Job Type: Full time
Instagram Auto Reels – Get ready for a new Reels experience
Instagram Auto Reels Tamil – Get ready for the new Reels experience: No more scrolling!
Instagram is a major social networking site from Meta. Launched in 2010, the app is now used by more than 1 billion users worldwide every month. It has become popular among people of all ages with various features such as sharing short videos, stories, and direct messaging.
Instagram often introduces new features on its platform to improve the user experience. The latest one is the “Auto Reels” feature.
Normally, when using the Reels section, users have to swipe manually to watch the next video after one video ends. But now with this new Auto Reels feature, the app can be used even more easily.
If users go to the Reels section and turn on “Auto Reels”, subsequent videos will automatically play continuously. This will work like YouTube autoplay.
This feature is specifically designed for users who want to watch Reels videos smoothly. You can continue to watch interesting videos without having to swipe with your hand.
🧪 Currently in beta testing…
The Auto Reels feature is currently only available to a few beta users. Meta plans to release it on a trial basis and then release it fully based on how users use it.
Currently, the feature is only available to iPhone users. However, it is rumored to be available to Android users in the coming weeks.
Ailevayapasaya Yuravazha Sunanadala is a simple change that will improve your Sunanadala experience. This feature is expected to be available to all users soon.
Share these new social media updates and tech news in Tamil with your friends and follow the changelog for more such information!