எரிபொருள் நுகர்வு 30 சதவீதம் குறைவு: வலுசக்தி அமைச்சர்

நாட்டில் எரிபொருள் நுகர்வு 30 சதவீதம் குறைந்துள்ளதாக வலுசக்தி அமைச்சர் குமார ஜயகொடி தெரிவித்துள்ளார்.
மட்டக்களப்பில் நடைபெற்ற நிகழ்வொன்றில் கலந்துகொண்டு உரையாற்றியபோது அவர் இதனைக் கூறியுள்ளார்.
மேலும், புதிய பெட்ரோல் நிலையங்களுக்கு அனுமதிப்பத்திரங்கள் வழங்கும் நடவடிக்கை தற்காலிகமாக இடைநிறுத்தப்பட்டுள்ளதாகவும் அவர் சுட்டிக்காட்டினார்.
மின்சார உற்பத்திக்கு புதுப்பிக்கத்தக்க ஆற்றலை அதிகளவில் பயன்படுத்துவதற்கான முயற்சிகள் மேற்கொள்ளப்பட்டு வருவதாகவும் அமைச்சர் குறிப்பிட்டுள்ளார்.
இலங்கையின் 70% மின்சாரத்தை 2030ஆம் ஆண்டுக்குள் புதுப்பிக்கத்தக்க ஆற்றல் மூலங்களில் இருந்து பெறுவதற்கு அரசு இலக்கு நிர்ணயித்துள்ளதாகவும், இதற்காக சூரிய சக்தி, காற்று, நீர் மற்றும் உயிரில் ஆற்றல் வளங்களைப் பயன்படுத்துவதற்கு முன்னுரிமை அளிக்கப்படுவதாகவும் அவர் மேலும் தெரிவித்துள்ளார்.
மேலதிக தகவல்களுக்கு மாற்றம் செய்திகள்
தினமும் நற்சிந்தனைகள், இராசிபலன்கள் போன்ற பல்வேறு விடயங்களை பற்றி தெரிந்துகொள்ள மாற்றம் செய்திகள் முகநூல் பக்கத்தை பார்வையிடவும்
Fuel consumption reduced by 30 percent: Energy Minister
Energy Minister Kumara Jayakody has stated that fuel consumption in the country has decreased by 30 percent.
He made this statement while addressing an event held in Batticaloa.
He also pointed out that the process of issuing permits for new petrol stations has been temporarily suspended.
The Minister also mentioned that efforts are being made to use renewable energy more extensively for electricity generation.
He further stated that the government has set a target to obtain 70% of Sri Lanka’s electricity from renewable energy sources by 2030, and for this purpose, priority is being given to the use of solar power, wind, water and biomass energy resources.