Certificate Awarding Ceremony
Certificate Awarding Ceremony

சான்றிதழ் வழங்கும் நிகழ்வு – விவேகானந்த தொழில்நுட்பவியல் கல்லூரி

விவேகானந்த தொழில்நுட்வியல் கல்லூரியின் புதுக்குடியிருப்பு மற்றும் கொம்மாதுறை கிளைகளில் பயிற்சி பெற்ற பயிலுனர்களிற்கான சான்றிதழ் வழங்கும் நிகழ்வு இன்று வெள்ளிக்கிழமை (01.08.2025) கிழக்கு பல்கலைகழகத்தின் மண்டபத்தில் இடம்பெற்றது.

கல்லூரியின் நிறைவேற்று பணிப்பாளரர் க.பிரதீஸ்வரன் அவர்களின் தலைமையில் இடம்பெற்ற இந் நிகழ்வில் கற்கை நெறிகளை பூர்த்தி செய்த மாணவர்களுக்கு NVQ தர சான்றிதல்கள் (தேசிய தொழில் சார் தகைமைத் தகுதிச் சான்றிதழ்), வாழ்க்கைத் திறன் பயிற்சி நெறிக்கான சான்றிதழ்கள் மற்றும் ஆங்கில மற்றும் சிங்களப் பாடநெறிக்கான சான்றிதழ்கள் என்பன வழங்கப்பட்டது.

இந்த நிகழ்வில் ஆன்மீக அதிதியாக ஸ்ரீமத் சுவாமி நீலமாதவானந்தஜி மகாராஜ் (பொது முகாமையாளர், ராமகிருஷ்ண மிஷன், கல்லடி, மட்டக்களப்பு) , பிரதம அதிதியாக அரசாங்க அதிபரின் பிரதிநிதியாக உதவி மாவட்ட செயலாளர் கு.பிரணவன் அவர்கள் கலந்துகொண்டதோடு சிறப்பு அதிதியாக பேராசிரியர் பிளோரன்ஸ் பாரதி கெனெடி (பணிப்பாளர், சுவாமி விபுலானந்த அழகியல் கற்கைகள் நிறுவனம், கிழக்குப் பல்கலைக்கழகம், இலங்கை) , கௌரவ அதிதியாக பாலா இமயவன் (தகவல் தொழில்நுட்ப நிபுணர், இங்கிலாந்து) ஆகியோர் கலந்துகொண்டு மாணவர்களுக்கு சான்றிதழ்களை வழங்கி வைத்தனர்.

இதன்போது 342 மாணவர்களுக்கு சான்றிதழ்கள் வழங்கி வைக்கப்பட்டதுடன் அதிதிகளும் கௌரவிக்கப்பட்டனர். இவ்வாறு வருடாந்தம் அண்ணளவாக 850 மேற்பட்ட இளைஞர்களுக்கு பயிற்சியினை வழங்குவதுடன் அவர்களின் தொழில்பாதையினை தெளிவூட்டி வருகின்றமை குறிப்பிடத்தக்கது.

மேலதிக தகவல்களுக்கு மாற்றம் செய்திகள்

Certificate Awarding Ceremony – Vivekananda College of Technology

The Certificate Awarding Ceremony for the trainees who completed their training at the Puthukudiyiruppu and Kommathurai branches of Vivekananda College of Technology was held today, Friday (01.08.2025), at the Eastern University auditorium.

The event was presided over by the Executive Director of the college, Mr. K. Pratheeswaran. During the ceremony, NVQ level certificates (National Vocational Qualification Certificates), Life Skills Training Certificates, and certificates for English and Sinhala language courses were awarded to students who successfully completed their training programs.

The spiritual guest for the event was Srimat Swami Neelamadhavanandaji Maharaj (General Manager, Ramakrishna Mission, Kalladi, Batticaloa), while the chief guest was Mr. K. Pranavan, Assistant District Secretary, representing the Government Agent. Special guest Professor Florence Bharathi Kennedy (Director, Swami Vipulananda Institute of Aesthetic Studies, Eastern University, Sri Lanka) and honorable guest Mr. Bala Imayavan (Information Technology Specialist, UK) also attended and presented certificates to the students.

A total of 342 students were awarded certificates at this event, and the guests were also felicitated. It is noteworthy that annually, training is provided to more than 850 youths, guiding them towards a clear career path.

For more news Maatram News