சிட்டுக்குருவியின் விநோத பழக்கம்
சிட்டுக்குருவியின் விநோத பழக்கம்

சிட்டுக்குருவியின் விநோத பழக்கம்

சிட்டுக்குருவியின் விநோத பழக்கம்

ஒரு ஊர்ல ஒரு சிட்டு குருவி இருந்ததாம். அக்குருவிக்கு ஒரு விநோத பழக்கம் இருந்ததாம். ஒவ்வொரு நாளும் நிறைவடையும் போதும் அந்த நாளில் என்ன சந்தோஷமான விடயம் நடந்தது என்ன துக்கமான விடயம் நடந்தது என்று அனைத்தையுமே சிறிய சிறிய கல்லில் எழுதி வைத்து அதனை தான் செல்லும் இடமெல்லாம் ஒரு சிறிய பையில் இட்டு எடுத்து செல்லுமாம்.

அவ்வாறு ஒரு நாள் தன்னுடைய சிறிய பையுடன் பறந்து சென்று ஒரு மரத்தில் அமர்ந்ததாம். அப்போ அந்த மரத்தில் இருந்த பொந்தில் ஒரு வயதான ஆந்தை நீண்டகாலமாக வாழந்து வந்ததாம். அந்த ஆந்தை குருவியிடம் கேட்டதாம் ஏன் நீ இந்த பையை உன்னுடனே கொண்டு செல்கிறாய் என்று. அதற்கு அந்த குருவி பதில் சொன்னதாம் நான் என்னுடைய வாழ் நாளில் நடக்கும் அனைத்தையும் இதில் எழுதி வைத்துள்ளேன். அது எனக்கு மிகவும் முக்கியமானது அதனால் தான் நான் செல்லும் இடமெல்லாம் கொண்டு செல்கிறேன் என்றது.

இதை கேட்டு சிரித்தபடி அந்த வயதான ஆந்தை சொன்னதாம் நீ இதனை பொண்டு செல்வதால் உன்னுடைய தோள்கள் கனக்கவில்லையா இதனை நிறுத்தி விடு என்று அறிவுரை கூறியதாம்.

ஆனால் அந்த சிட்டு குருவி வயதான ஆந்தையின் அறிவுரையை கேட்காமல் தொடர்ந்து தனது செயற்பாடுகளை கற்களில் எழுதி அதனை சுமந்து கொண்டே சென்றதாம்.

ஆரம்பத்தில் அவை அனைத்தும் இலகுவாக இருந்தாலும் காலம் செல்லச்செல்ல பையின் எடை அதிகரித்து செல்ல செல்ல அந்த குருவி பறந்து செல்லும் வேகம் குறைவடைய ஆரம்பித்தது. இருந்த போதிலும் அந்த குருவி தான் கற்களில் எழுதிஅதனை பையில் இட்டு நிறப்புவதை நிறுத்தவே இல்லை.

ஒரு நாள் குருவி பறந்து செல்லும் போது பலமாக காற்று வீசத்தொடங்கியுள்ளது. மழையும் பெய்ய ஆரம்பித்துள்ளது. இதனால் குருவியால் பறக்க முடியாமல் கீழே விழுந்துள்ளது. கீழே விழும் போது குருவியின் சிறகுகள் அது சுமந்து திரிந்த பையின் கீழ் அகப்பட்டு அது மிகுந்த வலியால் துடிக்க ஆரம்பித்துள்ளது.

இதனை அவதானித்த ஆந்தை குருவியின் அருகில் வந்து அதன் சிறகுகள் அந்த பையின் கீழ் மாட்டிக்கொண்டிருப்பதே அதன் வலிக்கு காரணம் என அறிந்து அந்த பையை தனது அலகால் விலக்கி குருவிக்கு விடுதலை வழங்கியது.

அப்போது அந்த ஆந்தை சிரித்துகொண்டே சொன்னது நான் அப்போதே நான் சொன்னேன் இதை தானே இனிமேலாவது சிந்தித்து செயல்படு என்றது.

நீதி – நம் வாழ்வில் தினம் நிகழும் ஒவ்வொரு நிகழ்வையும் அன்றோடு மறந்து விட்டு மறு நாளை புதிதாக தொடங்குவதே நமக்கு சிறப்பு. கடந்த காலத்தை நினைத்துகொண்டிருப்பதால் எந்த பயனும் இல்லை. நிகழ்காலத்தில் நாம் வாழப்பழகினாலே நம் வாழ்வு சிறப்பாகும்.

மேலதிக தகவல்களுக்கு மாற்றம் செய்திகள் இணையத்தளத்தினுள் பிரவேசியுங்கள்.

மேலதிக தகவல்களை உடனுக்குடன் பெற்றுக்கொள்ள மாற்றம் செய்திகள் முகநூல் பக்கத்தை பின்தொடரவும்.

The strange habit of the sparrow

There was a sparrow in a village. The sparrow had a strange habit. Every day, when it ended, it would write down everything that had happened that day, whether it was happy or sad, on a small stone and carry it in a small bag wherever it went.

One day, it flew away with its small bag and sat on a tree. At that time, an old owl had been living in the nest in that tree for a long time. The owl asked the sparrow why do you carry this bag with you. The sparrow replied that I have written down everything that happens in my life in it. It is very important to me, that is why I carry it wherever I go.

Hearing this, the old owl laughed and said that if you carry this bag, your shoulders are not heavy, so stop it.

But the little sparrow, not listening to the old owl’s advice, continued to write his actions on stones and carry them.

Although they were all light at first, as time went by, the weight of the bag increased and the speed of the sparrow’s flight began to slow down. Despite this, the sparrow never stopped writing on the stones and putting them in the bag.

One day, while the sparrow was flying, a strong wind started blowing. It also started raining. Due to this, the sparrow could not fly and fell down. As it fell down, the sparrow’s wings got caught under the bag it was carrying and it started to throb in great pain.

Observing this, the owl came near the sparrow and realized that its wings were getting caught under the bag and removed the bag from its beak and set the sparrow free.

Then the owl laughed and said, “I told you so, think about this yourself from now on.”

Justice – It is our privilege to forget every event that happens in our lives and start anew the next day. There is no use in dwelling on the past. Our lives are better when we learn to live in the present.