உயர்தர மாணவர்களுக்கான விசேட அறிவிப்பு
2025 ஆம் ஆண்டிற்கான க.பொ.த உயர்தர பரீட்சைகள் நடைபெறும் உத்தியோகபூர்வ திகதியை பரீட்சைகள் ஆணையாளர் நாயகம் சுபாஷினி இந்தியா குமாரி லியனகே அறிவித்துள்ளார்.
அதன்படி உயர்தர பரீட்சைகள் நவம்பர் 11 ஆம் திகதி முதல் டிசம்பர் 05 ஆம் திகதி வரை நடைபெறும் என ஆணையாளர் நாயகம் குறிப்பிட்டுள்ளார்.
அத்துடன், க.பொ.த சாதாரண தர பரீட்சைகள் 2026 ஆம் ஆண்டு பிப்ரவரி 17ஆம் திகதி முதல் 26 ஆம் திகதி வரை நடைபெறும் என்று அவர் மேலும் தெரிவித்துள்ளார்.
இரண்டு பரீட்சைகளுக்கான விரிவான கால அட்டவணைகள் மற்றும் நுழைவு அட்டைகள் அந்தந்த திகதிக்குள் வழங்கப்படும் என்றும் பரீட்சைகள் ஆணையாளர் நாயகம் தெரிவித்துள்ளார்.
இதேவேளை, 2025 ஆம் ஆண்டு க.பொ.த. (உயர்தர) பரீட்சைக்கான விண்ணப்பங்களை சமர்ப்பிப்பதற்கான இறுதி திகதி நீட்டிக்கப்பட்டுள்ளதாக கல்வி அமைச்சு (Ministry of Education) அறிவித்துள்ளது.

இதன்படி, ஓகஸ்ட் 12 ஆம் திகதி நள்ளிரவு 12 மணி வரை இணையவழியில் விண்ணப்பங்களை சமர்ப்பிக்க முடியும்.
மேலும், இந்த சலுகை காலம் எந்தவொரு காரணத்தைக் கொண்டும் மேலும் நீட்டிக்கப்படாது என்று கல்வி அமைச்சு வெளியிட்ட அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
மேலதிக தகவல்களுக்கு மாற்றம் செய்திகள் இணையத்தளத்தினுள் பிரவேசியுங்கள்.
மேலதிக தகவல்களை உடனுக்குடன் பெற்றுக்கொள்ள மாற்றம் செய்திகள் முகநூல் பக்கத்தை பின்தொடரவும்.
Special Announcement for Advanced Level Students
The Commissioner-General of Examinations, Subhashini India Kumari Liyanage, has announced the official dates for the 2025 G.C.E. Advanced Level examinations.
Accordingly, the Commissioner-General has stated that the Advanced Level examinations will be held from November 11 to December 05.
He also stated that the G.C.E. Ordinary Level examinations will be held from February 17 to 26, 2026.
The Commissioner-General of Examinations also stated that detailed time tables and admit cards for the two examinations will be issued by the respective dates.
Meanwhile, the Ministry of Education has announced that the last date for submission of applications for the 2025 G.C.E. (Advanced) examination has been extended.
Accordingly, applications can be submitted online until 12 midnight on August 12.
Furthermore, the Ministry of Education has stated in a statement that this grace period will not be extended further for any reason.