தொழிற்பயிற்சி பெறும் மாணவர்களுக்கு தொழில் வாய்ப்பை ஏற்படுத்துவது தொடர்பிலான கலந்துரையாடல்
தொழிற்பயிற்சி பெறும் மாணவர்களுக்கு தொழில் வாய்ப்பை ஏற்படுத்துவது தொடர்பிலான கலந்துரையாடல்

தொழிற்பயிற்சி பெறும் மாணவர்களுக்கு தொழில் வாய்ப்பை ஏற்படுத்துவது தொடர்பிலான கலந்துரையாடல்

தொழிற்பயிற்சி பெறும் மாணவர்களுக்கு தொழில் வாய்ப்பை ஏற்படுத்துவது தொடர்பிலான கலந்துரையாடல்

World University Service of Canada (WUSC) நிறுவனமானது மட்டக்களப்பு மாவட்டத்தில் தமது செயற்பாட்டை முன்னெடுப்பது தொடர்பிலான கலந்துரையாடலை விவேகானந்த தொழில்நுட்பவியல் கல்லூரி முகாமைத்துவ குழுவுடன் 13.08.2025 அன்று காலை அமிர்தாவில் மேற்கொண்டது.

WUSC நிறுவனத்தின் இலங்கைக்கான பணிப்பாளர் மும்தாஸ் அறூஸ் பலீல் மற்றும் சிரேஷ்ட நிகழ்ச்சி திட்ட முகாமையாளர் முருகேசன் முருகவேல் ஆகியோர் இந்த கலந்துரையாடலில் கலந்துகொண்டனர்.

World University Service of Canada நிறுவனமானது VCOT உடன் இணைந்து தொழிற்பயிற்சி பெறும் மாணவர்களுக்கு தொழில் வாய்ப்பை ஏற்படுத்தும் செயற்றிட்டத்தை கடந்த காலப்பகுதியில் மேற்கொண்டிருந்தது.

அதன் விளைவாக பல இளைஞர்கள் தொழிலை பெற்றுக் கொண்டதோடு, தற்போது தொழில் முயற்சியாளராக பலருக்கு வேலை வாய்ப்புக்களையும் வழங்கிக் கொண்டிருப்பது குறிப்பிட தக்க விடயமாகும்.

தொடர்ச்சியாக WUSC நிறுவனத்தால் மேற்கொள்ளப்படவிருக்கும் செயற்பாடுகள் சம்பந்தமான கலந்துரையாடலில், தற்போதைய இளைஞர்களின் மனநிலை, வேலை வாய்ப்புகளின் கேள்வி, அத்தோடு தொழில் வழங்குனர்களின் எதிர்பார்ப்புக்கள், சம்பந்தமாக பல்வேறு ஆக்கபூர்வமான விடயங்களை இரு சாராரும் கலந்துரையாடினர்.

மேலதிக தகவல்களுக்கு மாற்றம் செய்திகள் இணையத்தளத்தினுள் பிரவேசியுங்கள்.

மேலதிக தகவல்களை உடனுக்குடன் பெற்றுக்கொள்ள மாற்றம் செய்திகள் முகநூல் பக்கத்தை பின்தொடரவும்.

Discussion on creating job opportunities

World University Service of Canada (WUSC) held a discussion with the management team of Vivekananda College of Technology on the morning of 13.08.2025 at Amritha regarding the implementation of its activities in the Batticaloa district.

Mumtaz Arooz Palil, Director of WUSC Sri Lanka, and Murugesan Murugavel, Senior Program Manager, participated in this discussion.

World University Service of Canada, in collaboration with VCOT, had undertaken a project to create job opportunities for students undergoing vocational training in the past.

As a result, many youths have obtained jobs and are currently providing job opportunities to many as entrepreneurs.

In a discussion regarding the ongoing activities to be carried out by the WUSC, both parties discussed various constructive issues related to the current mindset of the youth, the question of job opportunities, as well as the expectations of employers.