மாதம் ஒரு களம்

மாதம் ஒரு களம்

மாதம் ஒரு களம்

இளைஞர்களின் மாற்றத்திற்கான வலுவூட்டல் என்னும் தொனிப்பொருளில் சமூகத்தின் மாற்றத்திற்கான ஒரு செயற்பாடாக விவேகானந்த தொழில்நுட்பவியல் கல்லூரியினால் நடைமுறைப்படுத்தப்படுகின்ற ‘மாதம் ஒரு களம்’ எனும் செயற்பாடானது விவேகானந்த சமுதாய அறக்கட்டளையின் ஒருங்கிணைப்பில் கல்லூரியினால் மாதாந்தம் முன்னெடுக்கப்பட்டு வருகின்றது.

அதனடிப்படையில், மாதம் ஒரு களம் செயற்பாடானது வந்தாறுமூலை பிரதேசத்தில் 20.08.2025 புதன் கிழமை அன்று 25 பேர் கொண்ட தொழில் முயற்சியாளர்களுக்கு செயலமர்வு இடம்பெற்றது.

இதன்போது தையல் பயிற்சியில் ஈடுபட்டுக்கொண்டிருப்பவர்கள், தையல் பயிற்சிகளை பூர்த்தி செய்து விட்டு தையல் வேலைகளில் ஈடுபடுவோர் மற்றும் தையல் கடைகளை நடாத்துபவர்களுக்கு இதன்போது அவர்களுடைய செயற்பாடுகளை அடுத்த கட்டத்திற்கு கொண்டு செல்வதற்கான வழிகாட்டுதல்கள் வழங்கப்பட்டது.

சுயதொழில் முயற்சியாளர்களுக்கு இவ்வாறான செயற்பாடுகளை மேற்கொள்வதன் மூலம் அவர்களை தொழில் துறையில் முன்னேற்றுவதற்கான அடித்தளமாக மட்டுமன்றி தையல் உற்பத்திகளை மேம்படுத்தல் மற்றும் சந்தைப்படுத்துதல் உள்ளிட்ட முறையான வழிகாட்டலுக்கும் இச்செயற்பாடு வழி வகுக்கும் என்பதில் ஐயமில்லை.

மேலதிக தகவல்களுக்கு மாற்றம் செய்திகள் இணையத்தளத்தினுள் பிரவேசியுங்கள்.

மேலதிக தகவல்களை உடனுக்குடன் பெற்றுக்கொள்ள மாற்றம் செய்திகள் முகநூல் பக்கத்தை பின்தொடரவும்.

One field per month

The ‘One Field a Month’ initiative, implemented by Vivekananda College of Technology as an initiative for social change under the theme of empowering youth for change, is being implemented by the college every month in coordination with the Vivekananda Community Foundation.

Based on this, a workshop was held for 25 entrepreneurs in the Vandharumoolai area on Wednesday, 20.08.2025.

During this, those who are engaged in tailoring training, those who have completed tailoring training and are engaged in tailoring work, and those who run tailoring shops were given guidelines to take their activities to the next level.

There is no doubt that this process will not only provide a foundation for self-employed entrepreneurs to advance in the industry by undertaking such activities, but will also pave the way for systematic guidance, including the improvement and marketing of tailoring products.