வெப்பநிலை எச்சரிக்கை மட்டத்துக்கு உயரக்கூடும்
நாட்டின் பல பகுதிகளில் இன்று மனித உடலால் உணரக்கூடிய வெப்பநிலை எச்சரிக்கை மட்டத்துக்கு உயரக்கூடும் என வளிமண்டலவியல் திணைக்களம் தெரிவித்துள்ளது.
கிழக்கு மற்றும் வடமத்திய மாகாணங்களுடன், ஹம்பாந்தோட்டை, மொனராகலை, வவுனியா, முல்லைத்தீவு மற்றும் கிளிநொச்சி மாவட்டங்களிலும் அதிக வெப்பமான வானிலை நிலவும் என எதிர்வுகூறப்பட்டுள்ளது.
இந்த நிலையில், வெப்பமான காலநிலையில் அதிகளவு நீர் மற்றும் நீர்ச்சத்து கொண்ட உணவுப் பொருட்களை உட்கொள்ளுமாறு பொதுமக்கள் அறிவுறுத்தப்பட்டுள்ளனர்.

மேலும், நீண்ட நேரம் ஓய்வு எடுக்கவும், தேவையில்லாமல் அடிக்கடி வெளியில் செல்வதை தவிர்க்கவும், வெள்ளை அல்லது வெளிர் நிற ஆடைகளை அணியவும் ஆலோசிக்கப்பட்டுள்ளது.
மேலதிக தகவல்களுக்கு மாற்றம் செய்திகள் இணையத்தளத்தினுள் பிரவேசியுங்கள்.
மேலதிக தகவல்களை உடனுக்குடன் பெற்றுக்கொள்ள மாற்றம் செய்திகள் முகநூல் பக்கத்தை பின்தொடரவும்.
Temperatures may rise to warning levels
The Department of Meteorology has stated that the temperature felt by the human body may rise to the warning level in many parts of the country today.
It is expected that extremely hot weather will prevail in the Eastern and North Central provinces, as well as in the Hambantota, Monaragala, Vavuniya, Mullaitivu and Kilinochchi districts.
In this situation, the public has been advised to consume plenty of water and water-rich foods during the hot weather.
It has also been advised to take long breaks, avoid going out unnecessarily, and wear white or light-colored clothes.