இலங்கை இராமகிருஷ்ண மிஷனினால் வழங்கப்படும் அதியுர் விருதான விவேகானந்த விருதினை இலங்கையில் முதல் முதலாக திரு.க.சற்குணேஸ்வரன் அவர்கள் பெற்றுள்ளார்.
சிவானந்த வித்தியாலயத்திலே மாணவனாக இருந்த காலத்தில் சுவாமி விவேகானந்தரின் புத்தகங்களை படித்ததன் விளைவாக மக்களுக்கு சேவை செய்ய வேண்டும் என்ற எண்ணம் மனதில் உதித்தன் காரணமாக திரு.க.சற்குணேஸ்வரன் அவர்கள் திருப்பழுகாமத்தில் திலகவதியார் மகளிர் இல்லம், சமூக நலன்புரி அமைப்பு, விவேகானந்த தொழில்நுட்பவியல் கல்லூரி என பல அமைப்புக்களை தோற்றுவித்ததுடன் விவேகானந்தரின் சிந்தனைகள் மற்றும் கருத்துக்கள் மக்களிடம் போய் சேர வேண்டும் என்ற நோக்கில் இந்த விவேகானந்த பூங்காவினை உருவாக்கி மாவட்டத்திற்கு பெருமை சேர்த்துள்ளார். கடந்த 25.08.2024 நடைபெற்ற விவேகானந்த பூங்கா திறப்பு விழாவில் கலந்துகொண்ட இராமகிருஷ்ண மிஷன் துறவிகளால் இந்த உயர் விருது வழங்கப்பட்டது.
இராமகிருஷ்ண மிஷனின் நோக்கம், விவேகானந்தரின் அறைகூவல் என்பவற்றுக்கு முன்னுதாரணமாக இருந்து அனைத்து துறவிகள், மற்றும் அனைத்து மக்களின் நன்மதிப்பினை பெற்றுள்ளார். எனவே இவருக்கு கிடைத்த இந்த உயரிய விருதினால் எமது மாவட்டமும், இந்த சமூகமும் பெருமை கொள்கின்றது.