தண்ணீர் குடிப்பதால் கிடைக்கும் நன்மைகள்
தண்ணீர் குடிப்பதால் கிடைக்கும் நன்மைகள்

தண்ணீர் குடிப்பதால் கிடைக்கும் நன்மைகள்

தண்ணீர் குடிப்பதால் கிடைக்கும் நன்மைகள் தொடர்பில் இந்த கட்டுரையின் மூலம் தெளிவுபடுத்த எண்ணுகின்றேன்.

தண்ணீர் இல்லாமல் மனிதன் வாழ முடியாது என்பதைக் காட்டிலும் வலிமையான உண்மை வேறில்லை. மனிதன் உணவு இல்லாமல் பல நாட்கள் உயிர் வாழ முடியும். ஆனால் தண்ணீர் இல்லாமல் சில நாட்கள் கூட வாழ முடியாது. அதனால்தான் வாழ்க்கையின் அடிப்படை ஆதாரமே தண்ணீர் என்று சொல்லப்படுகிறது.

நம்முடைய உடல் எடையின் சுமார் 60 – 70 வீதம் வரை தண்ணீரால் ஆனது. இரத்தம், மூளை, இதயம், தசைகள் என உடலின் ஒவ்வொரு உறுப்பும் தண்ணீரின் உதவியில்தான் இயங்குகிறது.

இரத்த ஓட்டம் சரியாக நடப்பதற்கும்

உடல் வெப்பநிலையை கட்டுப்படுத்தவும்,

உணவிலிருந்து ஊட்டச்சத்துகளை உடலுக்குள் கொண்டு செல்லவும்,

நச்சுக்களை வெளியேற்றவும் தண்ணீர்தான் முதன்மையாக காணப்படுகிறது

மனிதனின் உயிர் இந்த பூமியில் வாழ்வதற்கு இத்தனை முக்கியத்துவம் வாய்ந்த இந்த தண்ணீர் பூமியின் மேற்பரப்பின் 71 வீதத்தை கொண்டுள்ளது. இதில் முக்கியமாக கவனிக்கவேண்டியது என்னவென்றால், பூமியின் பெரும்பகுதி நீரில் சூழப்பட்டிருந்தாலும், 97% கடல் நீராகவும், வெறுமனே 3% மட்டுமே நன்னீராக காணப்படுகிறது.

மேலும் 3% குடிநீரில் கூட, 68% பனிமலைகள் மற்றும் பனிப்பாறைகளாகவும், 30% நிலத்தடி நீராகவும், வெறும் 1 – 2% நதிகள், ஏரிகள், குளங்கள் என காணப்படுகிறது.

பூமி முழுக்க தண்ணீர் நிறைய இருப்பது போலத் தோன்றினாலும், உண்மையில் மனிதர்களுக்கு பயன்படும் குடிநீர் மிகக் குறைவாக காணப்படுகிறது.

இத்தனை அரிய வளமான நீரை எமது உடலினுள் எடுத்து கொள்வது ஆரோக்கியமான ஒரு விடயம் என்றாலும், சரியான நேரத்தில் அவற்றை செய்வதால் கூடுதல் ஆரோக்கியத்தை பெற்றுக்கொள்ளலாம் என்பதே இந்த கட்டுரையின் நோக்கம்.

இரவு நேரத்தில் நாம் குறைந்தது 7 – 8 மணிநேரம் தூங்க வேண்டும். இதன்போது எமது உடல் ஓய்வு நிலையில் இருந்தாலும், மூளையானது தனது செயற்பாட்டை செய்வதற்கு சிறந்த நேரம். உடலில் உள்ள ஒவ்வொரு பாகங்களும் தன்னை தானே சீரமைக்க ஆரம்பிக்கும். இதன் மூலம் இயல்பாகவே எமது உடல் சில நச்சுப்பதார்த்தங்களை வெளியேற்றும்.

இவ்வாறு இரவு முழுவதும் நடந்த சுழற்சியை சரி செய்வதற்கு, காலையில் எழுந்தவுடன் சாதாரண தண்ணீர் அருந்துவது உடலில் உள்ள கழிவுகளை அகற்ற உதவுகிறது.

சரியான நேரத்தில் தண்ணீர் குடிப்பதால் கிடைக்கும் நன்மைகள்

காலை எழுந்தவுடன் (Empty Stomach)

  • இரவில் சேர்ந்த நச்சுக்கள் வெளியேறும்
  • குடல் சுத்தமாகும்
  • மலச்சிக்கல் பிரச்சினை குறையும்
  • நாள் முழுவதும் சுறுசுறுப்பாக இருக்க உதவும்

உணவுக்கு 30 நிமிடம் முன்பு

  • ஜீரணத்திற்கு உதவும்
  • வயிற்று அமிலம் சமநிலைப்படுத்தப்படும்
  • அதிகமாக சாப்பிடுவதை தவிர்க்கும்

உணவுக்கு 1 மணி நேரம் கழித்து

  • உணவு நன்றாக ஜீரணமாகும்
  • ஊட்டச்சத்து உறிஞ்சல் மேம்படும்

குளிப்பதற்கு முன்பு

  • இரத்த அழுத்தம் கட்டுப்படும்
  • இதயத்தின் சுமை குறையும்

தூங்குவதற்கு முன்பு

இதய நோய் அபாயத்தை குறைக்கும்

இரவு நேரத்தில் உடல் நீர்ச்சத்து குறையாமல் காக்கும்

தவிர்க்க வேண்டிய நேரங்கள்

இயல்பான வெப்பநிலையில் உள்ள தண்ணீர் குடிப்பது, உடலின் சக்தியை குறையாமல் பாதுகாக்கும்.

உணவு உண்ணும் போது அதிகம் தண்ணீர் பருக கூடாது

காரணம் ஜீரணம் தடைப்படுகிறது.

உணவு முழுமையாக ஜீரணமாவதில்லை, இதனால் வயிறு சம்பந்தப்பட்ட கோளாறுகள் மற்றும் மலச்சிக்கல்கள் ஏற்பட வாய்ப்பு உள்ளது.

ஒரே தடவையில் அதிகம் தண்ணீர் குடிக்க கூடாது

உடலில் ஒரே நேரத்தில் அதிகம் தண்ணீர் சேர்த்தால், இரத்தத்தில் உப்புப் பருமன் (Electrolyte Balance) சீராகாமல் போகும்.

இதனால் தலைவலி, சோர்வு, கால் கைகுறை போன்ற பிரச்சினைகள் ஏற்படலாம்.

இதற்கு பதிலாக, தினமும் மெதுவாக, சிறிய அளவுகளில் குடிப்பது நல்லது.

குளிர்ந்த பானங்கள் குடிப்பதை குறைக்கவும்

உடல் வெப்பநிலை கட்டுப்பாட்டில் இருக்கும் போது, மிகவும் குளிர்ந்த தண்ணீர் குடிப்பது தசைகள் மற்றும் ஜீரணத்தை பாதிக்கும்.

உடல் ஆரோக்கியத்திற்கு தேவையான தண்ணீர் அளவு வயது, உடல் எடை, உடற்பயிற்சி, சூழல் வெப்பநிலை போன்ற காரணங்களால் மாறுபடும்.

பெரியவர்கள் (Adults)

  • WHO பரிந்துரை: ஒரு பெரியவர் தினமும் சுமார் 2.5 – 3 லிட்டர் தண்ணீர் குடிக்க வேண்டும்.
  • இது இரத்த ஓட்டம், ஜீரணம் மற்றும் உடல் வெப்பநிலை கட்டுப்பாட்டுக்கு உதவும்.

குழந்தைகள் (Children)

  • 1 – 3 வயது: 1 – 1.3 லிட்டர்
  • 4 – 8 வயது: 1.3 – 1.7 லிட்டர்
  • 9 – 13 வயது: 1.7 – 2.4 லிட்டர்

உடற்பயிற்சி செய்யும் மற்றும் வெப்பமான இடங்களில் வாழும் மக்கள்

  • அதிக உழைப்பும், உடற்பயிற்சி அதிகமும் செய்யும் போது உடலில் நீர் விரைவாக இழக்கப்படும்.
  • குறைந்தது +0.5 – 1 லிட்டர் கூடுதல் தண்ணீர் தினசரி குடிக்க பரிந்துரைக்கப்படுகிறது.
  • வெப்பமான இடங்களில் இருப்பவர்கள் கூடுதல் தண்ணீர் குடிப்பது முக்கியம், dehydration (உடல் நீர் குறைவு) தவிர்க்க.

தண்ணீர் வாழ்க்கையின் ஆதாரம் என்பதோடு, அதை சரியான நேரத்தில் குடிப்பது உடல்நலனுக்கான ரகசிய ஆயுதம். காலை எழுந்ததும், உணவுக்கு முன்பும், பிறகு, படுக்கும் முன்பும் தண்ணீர் குடிப்பது உடலை ஆரோக்கியமாக, மனதை சுறுசுறுப்பாக வைத்திருக்கும்.

“சரியான நேரத்தில் தண்ணீர் குடிப்பது  நீண்ட ஆயுளுக்கான எளிய வழி”

மேலதிக தகவல்களுக்கு மாற்றம் செய்திகள் இணையத்தளத்தினுள் பிரவேசியுங்கள்.

மேலதிக தகவல்களை உடனுக்குடன் பெற்றுக்கொள்ள மாற்றம் செய்திகள் முகநூல் பக்கத்தை பின்தொடரவும்.

Benefits of drinking water

There is no stronger truth than the fact that humans cannot survive without water. While a person can live for several days without food, they cannot survive even a few days without water. That is why water is called the fundamental source of life.

About 60–70% of our body weight is made up of water. Every part of our body — blood, brain, heart, and muscles — functions with the help of water.

  • It ensures proper blood circulation
  • Maintains body temperature
  • Transports nutrients from food into the body
  • Helps remove toxins from the body

Although water covers about 71% of the Earth’s surface, only 3% of it is fresh water. The remaining 97% is saltwater in oceans. Among that 3% of freshwater, 68% is trapped in glaciers and ice caps, 30% as groundwater, and only 1–2% is available in rivers, lakes, and ponds.

Even though the Earth seems abundant in water, the amount of freshwater available for human use is very limited. Consuming this precious resource inside our bodies is healthy, but doing so at the right time maximizes health benefits.

Sleeping at least 7–8 hours at night allows the body to rest, while the brain continues its activity. During this time, every part of the body begins self-repair and naturally removes toxins. Drinking a glass of water in the morning helps eliminate the waste that accumulated overnight.


Benefits of Drinking Water at the Right Time

1. Morning (Empty Stomach)

  • Flushes out toxins accumulated overnight
  • Cleanses the digestive tract
  • Reduces constipation
  • Keeps you active throughout the day

2. 30 Minutes Before Meals

  • Aids digestion
  • Balances stomach acid
  • Helps prevent overeating

3. One Hour After Meals

  • Food is properly digested
  • Nutrient absorption is improved

4. Before Bathing

  • Regulates blood pressure
  • Reduces strain on the heart

5. Before Sleeping

  • Maintains hydration overnight
  • Reduces the risk of heart problems

Times to Avoid Drinking Water

  1. During Meals
    • Drinking too much water during meals can hinder digestion.
    • Undigested food may remain in the stomach, causing digestive problems and constipation.
  2. Drinking Large Amounts at Once
    • Rapid intake of large quantities of water can disturb electrolyte balance.
    • May lead to headaches, fatigue, or swelling in limbs.
    • Instead, drink slowly in small amounts throughout the day.
  3. Very Cold Water
    • Drinking extremely cold water can affect digestion and muscles.
    • Room temperature water is ideal for maintaining body energy and balance.

How Much Water Should You Drink Daily?

Daily water requirements vary depending on age, body weight, physical activity, and environmental temperature.

Adults

  • According to the World Health Organization (WHO), an adult should drink approximately 2.5–3 liters of water daily.
  • This ensures proper blood flow, digestion, and body temperature regulation.

Children

  • 1–3 years: 1–1.3 liters
  • 4–8 years: 1.3–1.7 liters
  • 9–13 years: 1.7–2.4 liters

Physically Active People & Hot Climates

  • People who exercise heavily or live in hot climates lose water faster.
  • It is recommended to drink an additional 0.5–1 liter daily to prevent dehydration.

Water is the source of life, and drinking it at the right time is a secret to good health. Drinking water in the morning, before meals, after meals, and before sleep keeps the body healthy and the mind active.

“Drinking water at the right time = simple key to a long, healthy life.”